சிறப்பு ரயில்களை இயல்பான ரயில்களாக மாற்ற வேண்டும். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தல்.

சிறப்பு ரயில்களை இயல்பான ரயில்களாக  மாற்ற வேண்டும். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தல்.

நவ-22

பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு ரயில்களை இயல்பான ரயில்களாக  மாற்ற வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி வலியுறுத்தல் தென்னக ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே கூடுதல் பொது மேலாளர் உடன் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது பழமை வாய்ந்த வாலாந்தரவை ரயில் நிலையம் மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் ராமேஸ்வரம் டு திருச்சி பயணிகள் ரயிலையும் நிறுத்தி செல்லவும் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அந்த ரயில் தினமும் மூன்று முறை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறப்பு ரயில்களை இயல்பான ரயில்கள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமேஸ்வரம் சென்னை இடையே பழைய ரயில் பெட்டிகளை மாற்றி புதிய ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் ராமநாதபுரம் உச்சிப்புளியில் ரயில் நிலைய நடைமேடை களை விரிவாக்கம் செய்ய வேண்டும் தங்கச்சிமடம் பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதால் 30 ஏக்கர் காலியிடமும் அங்கு உள்ளது. அந்த இடத்தில் ரயில்வே யார்ட் அமைக்க  பரிசீலனை செய்ய வேண்டும். தற்போதுள்ள ராமேஸ்வரம் சென்னை விரைவு வண்டிகள் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது அதை பகல் நேர விரைவு வண்டியாக  இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு