விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்த வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.
28/11/2021இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியத்தில் உள்ள நெறி கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பம்மா ஏரி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இந்த ஏரிக்கு கர்நாடகா மாநிலம் மாஸ்தி மற்றும் கர்நாடகா மற்ற பகுதியிலிருந்து நீர் தொடர் மழையின் காரணமாக இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது இந்த நீர் தீர்த்தம் பஞ்சாயத்தின் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் மார்கண்டேய நதியில் கலக்கிறது இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று
வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் திரு கேபி முனுசாமி அவர்கள் ஏரியில் உள்ள நீரை விவசாயத்திற்கு மற்ற ஏரிகளுக்கு செல்ல நேரில் சென்று பார்வையிட்டு அந்த நீரை வீணாக்காமல் விவசாய நிலங்களுக்கு கிடைத்திட ஏற்பாடு செய்தார் இந்த நிகழ்ச்சியில் சூளகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடாசலம் என்கின்ற பாபு எஸ் வி எஸ் மாதேஷ் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அவர்களும் மற்றும் விவசாய பெருமக்களும் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்.