மத்திய அரசின் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா முன்மாதிரி கிராமத் திட்டம் துவக்க விழா

மத்திய அரசின் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா முன்மாதிரி கிராமத் திட்டம் துவக்க விழா

ராமநாதபுரம் நவ- 27

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் ஊராட்சியில் மத்திய அரசின் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா முன்மாதிரி கிராமத் திட்டம் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா முன்மாதிரி கிராமத் திட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணத்தில் இன்று சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மக்களவை உறுப்பினர் திரு.கே. நவாஸ்கனி அவர்கள் மக்கள் தொடர்பு சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்த முகாம் பெரியபட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார் முன்னிலையில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை தலைமை ஏற்று ராமநாதபுரம் எம்பி பேசியதாவது:- இந்த திட்டம் மத்திய சர்க்காரின் திட்டம் இது மக்களின் தேவைகளை கேட்டறிந்து நாங்களே நேரடியாக வந்து நிவர்த்தி செய்வோம். அதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திட்டமானது மக்களுக்கான திட்டம் இந்த திட்டத்தை பெரியபட்டணம் ஊராட்சியில் துவக்கி வைக்க நானும் கூடுதல் ஆட்சியர் அவர்களும் இங்கு வந்துள்ளோம். இந்த ஊராட்சியை முன்மாதிரி பஞ்சாயத்தாக மாற்ற இந்த பெரியபட்டணம் தேர்வு செய்துள்ளோம். மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக முன்மாதிரியான ஊராட்சியாக இந்த ஊராட்சி இருக்க வேண்டும். இங்கு அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்துள்ளார்கள். மத்திய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜீவன் திட்டம் வேண்டும் என்று சில ஊராட்சியில் உள்ள மக்கள் கேட்கிறார்கள், சிலர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்த திட்டம் ஒரு மாபெரும் நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டம் சம்பந்தமாக ஊர் பெரியவர்கள் சொல்வதை கேட்டு அதேபோல செயல்படுவோம் இந்த ஊரில் வளர்ச்சிக்காக முன்னேற்றத்திற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். என்று அவர் பேசினார்.மாவட்ட கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் பேசியதாவது:-இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது நமது எம்பி அவர்கள் பெரியபட்டிணத்தை தேர்வு செய்துள்ளார். ஆகவே கிராம பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஊராட்சி முகமையின் சார்பில் பல கோடி ரூபாய்க்கு பணிகள் நடந்துவருகிறது. என்று கூடுதல் ஆட்சியர் பேசினார்.

கிராம யோஜனா முன்மாதிரி கிராம திட்ட துவக்கவிழாவில், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர்.      S.புல்லாணி, இ.யூ.மு.லீக் மாவட்ட தலைவர் ஹாஜி. வருசை முகமது, மாநில IT.விங் துணை அமைப்பாளர் அப்துல் ஜபார் ,குழு தலைவர் சிவலிங்கம் மற்றும் நகர்ச் செயலாளர் ஹதியத்துல்லா, மாவட்ட IT விங் அமைப்பாளர் சலாகுதீன் மற்றும் ஆசிப் உசேன்,உள்ளிட்ட. பெரியபட்டினம் கிராம பெரியவர்கள், ஜமாத்தார்கள் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள்,       மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி,

உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வருகை தந்த எம்பி. திரு. நவாஸ்கனி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஊராட்சித் தலைவர் திருமதி.அக்பர் ஜான் பீவி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். முடிவில் ஊர் பொதுமக்கள் கிராம வளர்ச்சிக்கு மனுக்கள் அளித்தனர். இதனை அடுத்து தேசிய கீதத்துடன் இனிதே இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு