கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவில் முதல்நாளான இன்று விருப்பமனுக்கள் விநியோகம்: மாநகராட்சி,பேரூராட்சிகளில் போட்டியிட ஆர்வத்துடன் குவிந்த தொண்டர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனுக்கள் நவம்பர் 26 முதல் 28வரை மாவட்ட கழக அலுவலகங்களில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவிப்பு செய்திருந்தது..
இந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சி,தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, ஒசூர் மாநகராட்சிகளில் போட்டியிடுவோருக்கான ஒசூர் - பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று விநியோகிக்கப்பட்டது..
முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்ற விருப்பமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் ஆர்வமுடன் குவிந்து மனுக்களை அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொண்டனர,
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர கழக செயலாளர் நாராயணன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஷ் ரொட்டி ரவிக்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் மதன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜே பி என்கின்ற ஜெயபிரகாஷ், பாசறை மாவட்ட செயலாளர் ராமு ,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன்,தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கழக செயலாளர் நாகேஷ், கெலமங்கலம் திமிராய் அப்பா, தவமணி ,எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் அசோகா ரெட்டி நாராயண ரெட்டி நந்தகுமார் சுரேஷ்பாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர செயலாளர் ஸ்ரீதர், 8வது வார்டு கழக பிரமுகர் சீனிவாசன்,குபேரன் என்கின்ற சங்கர், கும்மி என்கின்ற ஹேமா குமார், கழகப் பிரமுகர் ராஜு,கழகப் பிரமுகர் புருஷோத்தமன் ரெட்டி, நவின், பாலுசாமி, பாசறை மாநகர செயலாளர் இம்ரான் பாஷா,சாச்சு என்கின்ற அய்யாஸ், ரம்ஜான், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் செய்தியாளர் E.V.பழனியப்பன்