ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா நீங்கள்?இந்தப் பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்...!!

 ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா நீங்கள்?இந்தப் பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்...!!

உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்கள்.

உண்மை என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஐம்பதாண்டு திராவிட ஆட்சியின் மறுபக்க அவலம் இது. 

திராவிடக் கொள்கைகளில் மிகவும் பிரதானமானது இந்தி எதிர்ப்பும், இந்தி பேசும் வடநாட்டவர் எதிர்ப்பும். 

இவற்றை மையமாக வைத்தே திராவிடம் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கொள்கைகளை இன்றளவும் உயர்த்திப் பிடித்து வருகிறது. 

திராவிடத்  தமிழன் அடைந்தது என்ன...? இழந்தது என்ன...? 

என்று எந்த அறிவாளியாவது யோசித்து பார்த்தது உண்டா...?

         தமிழகம் தனக்கு தேவையான எல்லா பொருட்களையும் தானே உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல. 

       இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்கள், இயற்கை பொருட்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வர்த்தகத்தை செய்கின்றனர். 

          திருப்பூரின் பின்னலாடை, கோவையின் இயந்திரப்பொருட்கள், சென்னையின் ஆட்டோ மொபைல் பொருட்கள் இதெல்லாம் தமிழகத்தின் உற்பத்தி பொருட்கள். 

       அதே போல ஆந்திராவில் அரிசி.,  

குஜராத்தில் டைல்ஸ், வைரம், டெக்ஸ்டைல்ஸ்.,

 மேற்கு வங்கத்தில் சணல், பட்டு, பால் பொருட்கள்., 

பஞ்சாப்பில் கோதுமை, கனரக இயந்திர தயாரிப்பு.....

என அந்தந்த மாநிலங்கள் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றன. 

உற்பத்தி செய்த பொருட்களை இந்தியா முழுக்க விற்பனைக்கு அனுப்பி வைத்து வர்த்தகம் செய்கின்றன. 

இதற்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பது தெரிகிறது. பொறுமையாக அடுத்து படியுங்கள். 

எந்த மாநிலத்திற்குச் சென்று பார்த்தாலும் அந்தந்த மண்ணின் மைந்தர்கள் வர்த்தகத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

மும்பை சென்றால் மராட்டி, குஜராத் சென்றால் குஜராத்தி, பஞ்சாப் சென்றால் பஞ்சாபி.......

எல்லா மாநிலத்திலும் அந்தந்த மக்கள்தான் வர்த்தகம் செய்து கொண்டிருப்பார்கள். மிஞ்சிப் போனால் ஐந்து சதவிகிதம் பிற மாநில வியாபாரிகள் இருப்பார்கள். 

தமிழகத்தில் இது அப்படியே தலைகீழ். 

ஐந்து சதவிகிதம் தமிழர்கள் வியாபாரம் செய்கிறார்கள். 

95% பிற மாநிலத்தவர்கள் இங்கே வர்த்தகம் செய்கிறார்கள். 

உடனே நம்மூர் சில்லரை விற்பனை கடைகளைக் கணெக்கெடுக்க வேண்டாம். 

மொத்த விற்பனையாளர்களைக் கணக்கெடுங்கள் புரியும். 

பெண்கள் தலைக்கு அணியும் இரண்டு ரூபாய் மதிப்புள்ள ரப்பர் பேண்ட் முதல் கோடிகளில் புரளும் பல தொழில்கள் அனைத்தும் சேட்டுகள் என அழைக்கப்படும் ஹிந்தி பேசும் 

வட மாநில மக்களின் கைகளில் உள்ளன. 

 பல மாநிலங்களில் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து  கொள்முதல் செய்து வந்து 

நம்மூர் வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு விற்கும் ஹோல்சேல் கடைகளை நடத்துகின்றனர். 

           ஏன் நம்மூர் வியாபாரிகள் அந்த மொத்த வியாபாரத்தில் பிரகாசிக்க முடியவில்லை....? 

         ஒரே காரணம் ஹிந்தி தெரியாது. 

சென்னையின் கும்மிடிப் பூண்டியைத் தாண்டினால் சிங்கிள் டீ வாங்க வேண்டுமானாலும் தெலுங்கு அல்லது ஹிந்தியில் தான் கேட்டு வாங்க முடியும். 

நமக்குத்தான் ஹிந்தி பகையாயிற்றே...? 

        மொத்த விலையில் விற்பனை செய்யும் ஒரு ஃபேன்சி கடை வைக்க வேண்டுமானாலும் கூட நான்கு வட மாநிலங்களுக்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். 

 ஸ்டிக்கர் பொட்டுக்கு  மும்பை, கண்ணாடி வளையல்களுக்கு கொல்கத்தா, விலை மலிவான நக பாலிஸ் லிப்ஸ்டிக்களுக்கு டெல்லி,  கோன் மெஹந்திகளுக்கு ராஜஸ்தான், ஆடைகளில் வைக்கும் ஜரிகை ஜிகினாக்களுக்கு ஹைதராபாத் என உற்பத்தியாகும் இடங்களுக்குச் சென்று கொள்முதல் செய்தால் தான் ஒரு மொத்த வியாபார பேன்சி கடை வைக்க முடியும். 

நாம் தான் டுமீலர் பரம்பரையாயிற்றே ஹிந்தி நமக்கு தெரியாது. சென்னையைத் தாண்டினால் ஊமை மொழி தான் பேச தெரியும். இதில் எங்கே போய் உற்பத்தியாகும் பல மாநிலங்களுக்கு போய் 

கொள்முதல் செய்வது....? 

          இதைத்தான் குஜராத், ராஜஸ்தான் மாநில சேட்டுகள் பயன்படுத்தி மிக எளிதாக வர்த்தகம் செய்கின்றனர். 

          எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கட்டுமான பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட், பேன்சி, ஸ்டீல் தகடுகள், தோல் பொருட்கள், பொம்மைகள்........ என தமிழ்நாட்டில் நமக்கு தேவையான பொருட்கள் 90% சேட்டுகளின் மொத்த விலைக் கடைகளிலிருந்தே கைமாறி சில்லரை விற்பனையாக நமக்கு வருகிறது. நமது தமிழக வியாபாரிகள் கிட்டத்தட்ட சேட்டுகளை நம்பியே காலம் தள்ளும் நிலையில் உள்ளனர். 

 திராவிட  சாதனைகளில் ஒன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இதனால் தனி ஹிந்தி ஏரியாக்களே உருவாகி விட்டது. 

        சென்னையின் பாரிமுனை, சௌகார் பேட்டை போன்றவை மினி மும்பையாக மாறி விட்டன.  உள்ளே சென்றால் முழுக்க முழுக்க ஹிந்தி பேசும் மக்கள் தான். 

       வடநாடுகளில் மட்டுமே கிடைக்கும் இனிப்பு கடைகள், மசாலா டீக்கடைகள், ஹிந்தி DVD விற்கும் கடைகள், ஹிந்தி போஸ்டர்கள், ஹிந்தி சந்தைகள், பான் மசாலா கடைகள், வட இந்திய உணவகங்கள், ஹிந்தி மொழி பள்ளி......

        ஹிந்தியை விரட்டுவோம் என சொல்லிக்கொண்டு ஆட்சி செய்த திராவிட ஆட்சியாளர்கள் இந்தி பேசும் வட நாட்டவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளையே விற்று விட்டனர் எனச் சொல்லலாம். 

          சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் அப்படித்தான் உள்ளன. 

       தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியப் பகுதி, 

திருச்சி சிங்காரத்தோப்பு, 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் என வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் சேட்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன. 

     பதிவைப் பார்த்து யாரும் தமிழ் தேசியம் பேசுகிறேன் என்று எண்ணி கம்பு சுத்த வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் எவரும் சட்டத்திற்குட்பட்டு எந்த தொழிலையும் செய்யலாம். சேட்டுகள் அதைத்தான் செய்கிறார்கள். 

நம்மவர்கள் எதனால் தங்கள் மண்ணில் வர்த்தகத்தைக் கோட்டை விட்டார்கள் என்று சற்று சிந்திக்கவும். 

         திரைக்கடலோடி திரவியம் தேடிய நமது மூதாதையர்கள் தமிழை மட்டுமா அறிந்து வியாபாரம் செய்தனர். 

         இந்து மகா சமுத்திரம் தாண்டி ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், சீனம்  அனைத்திலும் கப்பலை செலுத்தி தமிழன் தனது வர்த்தகத்தை நடத்தினான் என்றால் பல மொழிகளையும் அவன் கற்றிருந்ததனால் அது சாத்தியமானது. 

    இன்றைக்கு  இந்திய மொழியான ஹிந்தியை கூட அறியாததால் தமிழகத்திற்குள்ளேயே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற கேவலமான நிலைக்கு வந்து விட்டது.

        சற்று சிந்தித்துப் பாருங்கள். தமிழகம் முழுவதும் குறைந்தது ஐந்து லட்சம் சேட்டுகளாவது வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். அவனும் உழைத்து தான் முன்னேறி சொந்தக் கடை, சொந்த வீடு என்று உயர்ந்த நிலைக்கு வருகிறான். 

       ஆனால் இது யாருக்கு கிடைத்திருக்க  வேண்டிய வாய்ப்பு என யோசியுங்கள். தமிழர்கள் உழைப்பதில், திறமையில் வடநாட்டு சேட்டுகளை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாம் அவர்களிடம் ஏன்  தோற்றோம்...? 

அவனுக்கு வியாபாரம் செய்ய தேவையான மொழி அறிவு உள்ளது.  திராவிடர்களின் பேச்சைக் கேட்டு வியாபார தொடர்பிற்கான இந்தி மொழியை நாம் இழந்தோம். 

இன்று....,

சேட்டு எலக்ட்ரிகல் கடை வைத்தால் அவனை அண்டி இரண்டு எலக்ட்ரீசியன்கள் இருக்கிறார்கள். ஸ்டீல் தகடு கடை சேட்டு வைத்தால் அவனை சார்ந்து  இரண்டு மீன் பாடி வண்டி லோடு  மேன்கள் தொழில் செய்கின்றனர். 

இதெல்லாம் நமது தமிழகத்தின் சாபக்கேடு

வேறு என்னத்தை சொல்ல....? 

இங்குள்ள மராத்தியர்களும் என்னிடம் அன்பாக கேட்பதுண்டு நீங்கள் ஏன்  ஹிந்தியை வெறுக்குறீர்கள் என்று..

ஆக,நாம் ஹிந்தியை கற்று தெரிந்து கொண்டால் ஒன்றும் குடிமூழ்கி போகாது. திராவிட கட்சிகளின் வண்டவாளங்களை நாம் தெரிந்து கொள்ளவும் உதவும். 

தெரிந்தால் இவர்கள் அரசியலில் அனாதையாக்கபடுவார்கள். 

அந்த பயத்தில்தான் ஹிந்தி பயின்றால் தமிழ் அழியும் என்று முட்டாளாக இருக்கும் தமிழனின் மனதில் விஷத்தை கலக்கிறார்கள்...

நாம் பல மொழிகள் கற்றால் நமது அறிவும், ஆற்றலும் பெருகுமே தவிர நமது தமிழ் மொழி அழியாது..

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே  வாளொடு முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி...

வேறு மொழி கற்றால் தமிழ் அழியும் என்பது கோமாளிகளின் கூற்று ...அவனுக்கு தமிழனை வெளியே எங்கும் செல்லமுடியாத படிக்கு அடிமையாகவே வைத்திருக்க ஆசை....

உயிரை விடவும் மேலாக தமிழ்மொழியை நேசிப்போம் சுவாசிப்போம்....

மற்ற மொழிகளையும் நேசித்து வாசிப்போம்..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னால் மட்டும் போதாது.

கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்.

அதில் மொழிகளும் அடங்கும்.

நன்றி....இது யாரோ ஒருவரின் கருத்து என்று தாண்டிச் செல்லாமல் இனியாவது யோசித்து நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள்... மற்ற மொழிகளை வெறுக்காமல் குழந்தைகளுக்கு படிக்க கற்றுக் கொடுங்கள்