ஒசூரில் வருமானவரி துறை சார்பில் TDS குறித்து விழிப்புணர்வு வகுப்பு :

 ஒசூரில் வருமானவரி துறை சார்பில் TDS குறித்து விழிப்புணர்வு வகுப்பு :

ஒசூர், அக் 2:

ஓசூரில் இருக்கும் வருமான துறையின் TDS பிரிவு,  நேற்று காலை  ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒசூரிலுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு TDS குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் TDS கழித்தல், பணம் அனுப்புதல் மற்றும் TDS ரிட்டர்ன்களை தாக்கல் செய்வது தொடர்பாக சுருக்கமான விளக்கம் அளிக்கப்பட்டன.

மேலும் டிடிஎஸ்ஸை சரியாகக் கழிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ரிட்டர்ன்களை தாக்கல் செய்வது பற்றியும், அபராதம் மற்றும் வழக்கு தொடர்பான டிடிஎஸ்ஸின் பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் கேள்விகள் கேட்டு தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் டிடிஎஸ் வார்டு வருமான வரி அதிகாரி க்ஷிதிஜ் ரஞ்சன் தலைமை வகித்தார்.  

மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராஜேந்திரன்,  வருமான வரி அதிகாரி வி.ராஜன், ஆய்வாளர்கள் துர்கா பிரசாத்,  சுபோத் குமார், மூத்த வரி உதவியாளர்கள் லோலி,   பிரியங்கா குமாரி,  திருமதி அர்சலா பாத்மா,  உதவியாளர் சங்கிலிகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

56 பள்ளி தலைமை ஆசிர்யர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 ஓசூர் செய்தியாளர்; E.V.  பழனியப்பன்