கலாம் நினைவிடத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலி
ராமநாதபுரம் அக்- 15
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகில் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மறைந்த கலாமின் பேரன் சேக் சலீம், வழக்கறிஞர் சங்கத் தலைவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திர ராமவன்னி,
ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மற்றும் வெள்ளரி ஓடை ஊராட்சி தலைவர் சந்திரசேகர்,
ராமநாதபுரம் (வடக்கு) நகர செயலாளர் கார்மேகம், ராமநாதபுரம் கிழக்கு நகர செயலாளர் பிரவீன்தங்கம், மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர் சுரேஷ், திமுக பிரமுகர் காளிதாஸ், ராமநாதபுரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரதீப் மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ராமநாதபரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு