தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவை ஏடுகள் குழுவின் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவை  ஏடுகள் குழுவின் ஆய்வு கூட்டம்


ராமநாதபுரம் அக்-22

தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவையில் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் ஆய்வு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரம் ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில்  குழுவின் தலைவர் கம்பம் திரு. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் 2009 - 2010,10 -11, 12, 13,14 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டு அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்தது சம்பந்தமாக இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாளையங்கோட்டை அப்துல் வஹாப், V. அமலு குடியாத்தம், கடையநல்லூர் கிருஷ்ணமுரளி, பொன்னேரி (தனி) துரை.சந்திரசேகர், விக்கிரவாண்டி புகழேந்தி, மேலூர் பெரிய புள்ளான் (எ)செல்வம்,  சேந்தமங்கலம் பொன்னுச்சாமி, கங்கவள்ளி (தனி) நல்லதம்பி, நிலக்கோட்டை (தனி) தேன்மொழி,மயிலாப்பூர் வேலு ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம.கரு மாணிக்கம் அவர்கள், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.உ.திசைவீரன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு