அதிமுக தொண்டர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் அக்-26
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும் கழக மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர்.மணிகண்டன் இன்று காலை திருப்புல்லாணி ஒன்றிய அதிமுகவினருக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பையா தலைமையில் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் திருப்புல்லாணி ஒன்றிய கழக துணை செயலாளர் பாக்கியநாதன் முன்னிலையில் அதிமுக தொண்டர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகளை வழங்கி கவுரவித்தார். இதில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ராதமதாஸ், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு