அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிதண்ணீர் கிணற்றில் குதித்து தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிதண்ணீர் கிணற்றில் குதித்து தற்கொலை


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட விருதாச்சலம் ரோடு சாலையில் உள்ள பேரூராட்சி சொந்தமான குடிதண்ணீர் கிணற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பேரூராட்சி ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டது கிணற்றுக்கு சென்று பேரூராட்சி ஊழியர் பார்க்கும்போது உடல் கிணற்றில் கிடப்பதை பார்த்துசத்தம் போட்டுள்ளார் இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

.தீயணைப்புதுறையினர் வந்து உடலை தேடும்  பணியை துவங்கி சுமார் அரை மணி நேரத்திற்குள் இறந்து போனவரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்து பின்னர் அவர் யார் என்று அடையாளம் தெரியாததால் உடலை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G.முருகன்