ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்


ராமநாதபுரம் அக்-02

மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினமான இன்று 2.10. 20201 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பு ஆ.ம. காமாட்சி  கணேசன் அவர்கள் தலைமையில், நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் ராமநாதபுரம்  M.P.நவாஸ் கனி, ராமநாதபுரம் M.L.A காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீண்குமார் அவர்கள், கலந்துகொண்டார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி அவர்கள், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், கலந்துகொண்டு மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவைகளை உடனடியாக சரிசெய்து தருவதாக ஊராட்சி மக்களிடம் உறுதி அளித்தனர். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் மாவீரன் வேலுச்சாமி, இ.யூ.மு.லீக் மாவட்ட தலைவர் ஹாஜி.வருசை முகமது, மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் மற்றும் மாநில ஊடக பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார், மாவட்ட துணைத் தலைவர் சாதுல்லாகான், குருவாடி அன்சாரி, முன்னாள் நகர செயலாளர் ஹதியத்துல்லா, ஊடகப் பிரிவு சலாவுதீன், பஞ்சாயத்து ஏடி. கேசவதாசன்  ராமநாதபுரம் வட் டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அத்தியூத்து பொதுமக்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், அனைத்து அரசு,  அலுவலர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாட்டினை அத்தியூத்து ஊராட்சி மன்ற தலைவர் மாலிக் செய்திருந்தார். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு