அனைத்து மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் அக்-25
ராமநாதபுரம் மாவட்டம் தமிழக கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் நகர் பாரதி நகர் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திரு.வி. பி.ஜேசுராஜா, திரு. எஞ்சிய போஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி டீசல் எரிபொருளை சிறிய அளவிலான வரிவிதிப்பு விதித்து உற்பத்தி விலையை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 2 கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கும் கச்சத்தீவில் தகவலை உயர்த்தவும் திருவிழா கொண்டாடவும் சரத்துக்கள் மூலம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. கச்சத்தீவு இலங்கை இராணுவத்தின் முகாமாக மாற்றப்பட்டு இந்திய மீனவர்களின் உரிமையை விடுவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பிற்கு பாதகமாக உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மூலம் பாரம்பரிய கடற் பரப்பில் மீன்பிடிக்க உரிமை பெற்றுக் கொடுக்கவும், மீனவர்களின் பொருள் இழப்பையும் உயிரிழப்பு இருக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவும் சுமார் 5 வருடங்களாக இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சேதமாகி போன 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 15க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும் வழிவகை செய்ய இந்த தீர்மானம் மூலம்
மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் 2021 மீனவர் மசோதா மீனவர்களுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அளிக்கக்கூடியது எனவே மேற்படி பசட்டத்தை அறிமுக நிலையில் மீனவர்கள் ஆகிய நாங்கள் எதிர்க்கின்றோம் அத்தோடு மீனவர்களையும் மீன் வளத்தையும் பாதுகாக்கும் சட்டம் இயற்றி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 4: தமிழக முதல்வர் அவர்களை தமிழக கடலோர மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் சந்திப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் தீர்மானம் ஐந்தாக மேற்சொன்ன நான்கு தீர்மானங்களையும் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு முழுமையாக தொடர்புடையது என்று கருதி மத்திய மாநில அரசுகள் உடனடியாக பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுக்க கொடுக்க வேண்டுமெனவும் மீனவர்களின் அவசர தேவையின் நிமித்தம் வேண்டிக்கொள்கிறது மேற்சொன்ன தீர்மானங்கள் வரும் 10 .11.ம் 2021 க்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க. படவில்லை என்றால் 10.11.2021 முதல் தொடர் வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மே 17 இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன் காந்தி, இராமேஸ்வரம் தேவதாஸ், மல்லிபட்டிணம் தாஜுதீன் தூத்துக்குடி சேவியர் வாஸ், கன்னியாகுமரி செல்வம், சின்னமுட்டம் சில்வெர்ஸ்டர், காரைக்கால் ஜெகதீசன், காரைக்கால் ராமன், ஜெகதாபட்டினம் STB கனமணி உள்ளிட்ட 17 மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு