தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா

தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா


ராமநாதபுரம் அக்- 13

ராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 35-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா இன்று ராமநாதபுரம்&சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புத்தக கண்காட்சியை தலைமையேற்று திறந்து வைத்தவர் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ)ஆ.ம.காமாட்சி கணேசன் அவர்கள், முதல் விற்பனையை தொடங்கி வைத்தவர் கூடுதல் ஆட்சியர் கே. ஜே .பிரவீன்குமார் அவர்கள், நூல்களைப் பெற்றுக் கொண்டவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக் அவர்கள், வரவேற்புரை ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.பா  ஞான லெட்சா சொர்ண குமாரி அவர்கள், இதற்கான ஏற்பாட்டினை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், மதுரை கிளை மேலாளர் கு. பாலசுப்ரமணி செய்திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு