நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்த நாள் விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்த நாள் விழா


ராமநாதபுரம் அக்-01 

ராமநாதபுரம் மாவட்டம்  ராமநாதபுரம் நகர் டாக்டர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் 94 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மாவட்டத்தலைவர்  நாகேஸ்வரன் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ். ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியன், மேகநாதன், நகர் காங்கிரஸ் ரவிக்குமார், G.முத்துவேல், முருகானந்தம்,  ரவிக்குமார், சிவாஜி மணி,ராமநாதபுரம் தமிழ் சங்கம் துணைத் தலைவர் விவேகானந்தன், மற்றும் சிவாஜி கணேசன் மன்றத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள் இதனை அடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இன்று மதியம் வழக்கம்போல் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.. அன்னதான நிகழ்ச்சியை தமிழ்ச் சங்க துணை தலைவர், விவேகானந்தன் துவக்கிவைத்தார்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு