மாவட்ட அளவிளான தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் 2021

மாவட்ட அளவிளான தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை  முகாம் 2021


  ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் இந்திய அரசு தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்கம் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிளான தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை  முகாம் 2021  

ராமநாதபுரம்  ஐடிஐ வளாகத்தில்  மண்டல பயிற்சி  இணை இயக்குனர் அமலாபாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி இணை இயக்குனரும் ராமநாதபுரம் ஐடிஐ முதல்வருமான ரமேஷ் குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு மின்வாரியம்,அரசு உப்பு உற்பத்தி கழகம், வழுதூர் மின் நிலையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த  பயிற்சி முகாமில் கலந்து கொண்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதற்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையினர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு