RTE கல்வி கட்டண பாக்கியை இரண்டு வாரங்களுக்குள் உயர்த்தி வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

RTE கல்வி கட்டண பாக்கியை இரண்டு வாரங்களுக்குள் உயர்த்தி வழங்க வேண்டும்;  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத மாணவர்கள்சேர்த்திட்ட வகையில் கல்விக் கட்டணம் நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணம் மற்றும்  அரசு தரும் கல்விக்கட்டணம் மிகக்குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகையை அனைத்து பள்ளிகளுக்கும்  நிர்ணயம் செய்து ஆர். டி. இ.கல்வி கட்டண பாக்கியை உடனே  தரக்கோரி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்குவந்தது..

இரண்டு வாரங்களுக்குள் அரசு சரியான முடிவெடுத்து உரிய நியாயமான  கட்டணம் வழங்கிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக நமது சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளிகள் தலைவர் திரு.ராஜகோபால் அவர்களின் டால்பின் நர்சரி பிரைமரி பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி போட்ட வழக்கில் நான்கு வாரத்திற்குள் தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று இன்று  திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மதுரை உயர் நீதிமன்ற  கிளை உத்தரவிட்டுள்ளது.

 அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

 அடுத்து நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்குவோம். சொல்வதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் அதுதான் எங்கள் மாநிலச் சங்கத்தின் தாரக மந்திரம்.

அன்புடன் உங்கள்

 கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.