திருநெல்வேலியில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலியில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்! 


திருநெல்வேலியில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்! தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில், பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து, கோஷம் போட்டனர்! திருநெல்வேலி,செப்.3:- மத்தியில் ஆளும், "பிரதமர்" நரேந்திரமோடி தலைமையிலான, ஒன்றிய "பா.ஜ.க.அரசு", அதிக லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான, இன்சூரன்ஸ், ரெயில்வே, நிலக்கரி, தொலைத்தொடர்பு, எல்.ஐ.சி. போன்றவற்றை, " தேசிய பணமாக்கல் திட்டம்" என்ற பெயரில், தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அதனைக் கண்டித்து, திருநெல்வேலி மகாராஜாநகரில் உள்ள, மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக, நேற்று (செப்டம்பர்.2) மாலையில், "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  திட்ட தலைவர் எம்.பீர்முகம்மது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.கந்தசாமி, பொருளாளர் பி.நாகையன், நகர்ப்புற தலைவர் ஏ.முத்தையா, மத்திய அமைப்பு செயலர் எஸ்.மந்திரமூர்த்தி ஆகியோர், விளக்கவுரை நிகழ்த்தினர். திட்ட செயலர் எஸ்.வண்ணமுத்து, நிறைவுரையாற்றினார். தனியார்மயத்தை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக, ஆர்ப்பாட்டக்காரர்கள்  "கண்டன கோஷங்கள்" எழுப்பினர்.