ராமநாதபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகம் இன்று உதயமாகியது

 ராமநாதபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகம் இன்று உதயமாகியது


ராமநாதபுரம் செப்-12 

ராமநாதபுரம் மாவட்ட ம், ராமநாதபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகம் இன்று உதயமாகியது. இந்து முன்னேற்றக்  கழகத்தை தனியார் ஓட்டலில் வைத்து மாநிலதலைவர் வழக்குரைஞர் K.  கோபிநாத் துவக்கிவைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் M.S.செந்தில்குமார், மாநில இளைஞர் அணித்தலைவர் M. தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை பொதுச்செயலாளர்   M.S.செந்தில்குமார், அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாவட்டத்தலைவராக, TR. வெங்கடேஷ், மாவட்ட செயலாராக சரத்குமார், மாவட்ட பொருளாளராக தினேஷ்குமார், உள்|ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், நியமனம் செய்யப்பட்டனர். முடிவில் மாநில தலைவர் வழக்குரைஞர் கே.கோபிநாத் இயக்கத்தின் கொள்கைப்பற்றி பேசினார். இதில் முகேஷ், சுந்தர், அருண்பாபு, அன்பு, சரவணன், கார்த்திக் ராமன் சரத், அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு