ஊராட்சி தலைவர்களை ஊராட்சி செயலாளர்கள் மதிப்பதே இல்லை; பர்கூர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு...!

ஊராட்சி தலைவர்களை ஊராட்சி செயலாளர்கள் மதிப்பதே இல்லை; பர்கூர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு...!

தமிழக சட்டப் பேரவையில் நேற்று வனத்துறை, சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பர்கூர் தொகுதி உறுப்பினர் மதியழகன்(திமுக) பேசுகையில், ''கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சி தலைவர்கள் இல்லாத காரணத்தால், ஊராட்சி செயலாளர்கள் தங்கள் இஷ்டம் போல செயல்பட்டு வந்தனர்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஊராட்சி தலைவர்களை அவர்கள் மதிக்காமல் செயல்படுவதால் மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டிய திட்டங்கள் சென்றடையாமல் உள்ளது. 
அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன்அவர்களின் பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.

ஊராட்சி தலைவர்களை விட ஊழல் செய்வதில் உயர்ந்தவர்களாக இந்த ஊராட்சி செயலாளர்கள் இருக்கிறார்கள் கார் இல்லாத ஊராட்சி செயலாளர் இல்லை பங்களா கட்டாத ஊராட்சி செயலாளர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒவ்வொரு ஊராட்சி செயலாளர்களும் கொள்ளையடித்து குவித்து வைத்துள்ளனர். 

ஊராட்சியை உருப்படியாக உயர்த்த வேண்டும் என்கின்ற நல்ல தலைவர்களை கூட இவர்கள் மாற்றி விடுவார்கள் அந்த அளவுக்கு ஊழலில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே இவர்களின் மீது அரசு ஒரு கண் வைப்பது நல்லது என்கிறார்கள்.