தனியார் பள்ளிகள் போராட தயங்க மாட்டோம்; மாவட்டத் தலைவர் பேச்சு

 தனியார் பள்ளிகள் போராட தயங்க மாட்டோம்;  மாவட்டத் தலைவர் பேச்சு

திண்டுக்கல்:தனியார் பள்ளிகள் போராடுவதற்கு தயங்க மாட்டோம் என மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

திண்டுக்கல்லில்தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க கூட்டம் நடந்தது.

இதற்கு வித்யா பார்த்தி பள்ளி குழுமத்தின் தாளாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்.கே கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சரவணப்பொய்கை,  குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தாடிக்கொம்பு ஸ்ரீ லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சந்திரசேகர் வரவேற்றார். கூட்டத்தின் நோக்கம் குறித்து ஏ.ஐ.எம். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் கே .வித்யா விளக்கவுரை ஆற்றினார். 

இதில் மாவட்ட தலைவர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தனியார் பள்ளிகளை பாதுகாக்கத்தான் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் கனகராஜ் பல தியாகங்களுக்கு சொந்தக்காரர். இதேபோல் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார்  என்னிடம் பேசும்போது: திண்டுக்கல்லில் வரலாற்றைப் பற்றி என்னிடம் சொல்லி பெருமைப்பட்டார். இந்த மண்ணில் இருந்து நீங்கள் நடத்தும் கூட்டம் வெற்றி பெறும் என என்னை வாழ்த்தினார். திண்டுக்கல்லில் 

இன்றைய நாள் ஒரு புனித நாள் .இந்த சங்கம் நிச்சயம் வெல்லும் .நமது நோக்கம் வெற்றி பெறும். கொரோனா காலத்தில் பல பள்ளிகள் பொருளாதாரம் இழந்து தவிக்கின்றன. பல ஆசிரியர்களின் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருந்து தனியார் பள்ளிகள் வளர்ச்சியும் பெற, மீட்சியும் பெற வேண்டும். இந்த சங்கம் தனியார் பள்ளிகளுக்கு கேடயமாக இருந்து உதவும். தனியார் பள்ளிகளுக்கு உதவுவதற்கு அரசும்,  நீதித்துறையும் முன்வர வேண்டும். தனியார் பள்ளிகள் கல்வி மட்டுமல்ல சமுதாய புரட்சியையும் செய்ய வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சேவை செய்வதைத் தொண்டாக கருத வேண்டும். அரசாங்கம் உதவாவிட்டால் போராட தயங்க மாட்டோம். தனியார் பள்ளிகளும் தொண்டுள்ளதுடன், மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு  நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி இயக்குனரகம் அமைக்க வேண்டும், என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏ.கே. வி கல்வி நிறுவனத்தின் தாளாளர் ராமலிங்கம், எஸ்பிஎம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயராஜ், காளாஞ்சி பட்டி விவேகானந்தா வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரெங்கசாமி, வடமதுரை குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் பிரபாகரன், கே கே ஏ ஜி பள்ளியின் தாளாளர் தமிழ்ச்செல்வன், பழனி இளஞ்சியம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் ராமலிங்கம், ஹயகிரீவர் பள்ளித் தாளாளர் சௌந்தர் மற்றும் பல தாளாளர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

பழநி ரெயின்போ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பொருளாளர் ரவி நன்றி கூறினார்.