பணம் தராதீங்க! மின்துறை தகவல்!

 பணம் தராதீங்க! மின்துறை தகவல்!


புதுச்சேரி:உயர் தொழில்நுட்ப மின்சார மீட்டர்களாக மாற்றும் பணிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என, மின்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மின்துறை செயற்பொறியாளர் -கிராமம்(தெற்கு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மின் நுகர்வோர்களின் மின்சார மீட்டர்களை உயர் தொழில்நுட்பமுள்ள மீட்டர்களாக மாற்றும் பணியை, புதுச்சேரி மின்துறை தற்போது மேற்கொண்டு வருகிறது. 

இதற்கான செலவுகளை மின்துறையே முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறது.எனவே, இவ்வாறு மீட்டர் மாற்றுவதற்கு, மின்துறைக்கோ, மீட்டர் மாற்ற வரும் பணியாளர்களுக்கோ மின்நுகர்வோர் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

இதுதொடர்பாக, ஏதேனும் புகார்கள் இருந்தால், அந்தப் பகுதியின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவின் இளநிலைப் பொறியாளரை அணுகுமாறு தெரிவிக்கப்படுக