உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் ஏற்றுமதியாளர்களின், கூட்டம்

உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும்  ஏற்றுமதியாளர்களின், கூட்டம்


ராமநாதபுரம் செப்-25

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக ஏற்றுமதியாளர்களின், கூட்டம் தனியார் நிறுவனத்தில் இன்று காலை நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு கூடுதல் ஆட்சியர் திரு.கே.ஜே. பிரவீன்குமார் அவர்கள், தலைமையில் நடைபெற்றது.  மேலும் அவர் பேசியதாவது தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்த  ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு ஏற்றுமதி மூலமாக 'அடைந்திருக்கும் அடையவிருக்கும் தமிழ்நாட்டில் உருவாக்குதல் இலக்குகளை பற்றி உரையாற்றினார். இதில் ஏராளமான பொருள் உற்பத்தியாளர்கள் , ஏற்றுமதியாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் சுங்கத்தீர்வை, தூத்துக்குடி அவர்கள், ஏற்றுமதி குறித்த நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் நன்றாக விளக்கி பேசினார். ராமநாதபுரம் தொழில் மையம் பொது மேலாளர் திரு. மாரிமுத்து அவர்கள், வருகை தந்த அதிகாரிகள்  பிரமுகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை வரவேற்று நினைவுபரிசுகள் வழங்கி,ஏற்றுமதியாளர்கள் காட்சிப்படுத்திய ஏற்றுமதிக்கான பொருட்களை கூடுதல் ஆட்சியர் அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு