பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு; டி ராஜா குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதமிழ் மாநிலக்குழு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது,இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த தேசியசெயலாளர் டி.ராஜா செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,கடந்தவாரம் முதல் முறையாக பாராளுமன்றம் நடைபெறவில்லை.பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியல் சட்டம்,ஜனநாயகத்தை காப்பாற்றிட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி எல்லா இடங்களிலும் அமைப்புகளை பலப்படுத்திவருகிறது.
மத்தியில் நடைபெறும் பா.ஜ.ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு,வேலையில்லா திண்டாட்டமும் உண்டாகியுள்ளது.இதை பொதுமக்கள் உணர வேண்டும்.மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்ரேட்டுகளுக்குதாரை வார்க்கப்படுகிறது.டெல்லியில் கடந்த 10 மாதங்களாக 3 வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இது மத்திய அரசின் காதில் விழவில்லை.மதமாற்ற தடை சட்டம்
என்ற பெயரால் சிறுபான்மை,தலித், பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்
நடக்கிறது.
எனவே நாட்டையும்,ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும்
ஒன்றிணைந்து போராடுவோம்.19 அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி செப்டம்பர் 20
முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய முறையில் கண்டன இயக்கத்தை நடத்த
வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.
திராவிடமுன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் உட்பட இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிஎல்லோரும் சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும்என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய கடை அடைப்பு
அல்லது முழு அடைப்புக்குஅறிவித்திருக்கிறார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் முழுமையாக
ஆதரித்து அவர்களோடு ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருக்கிறோம்..இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி முன் நிற்பது மட்டுமல்ல மக்களை பணிவன்போடு கேட்டுக்
கொள்கிறது இது நாட்டுக்காக நாட்டின் எதிர்காலத்திற்காக நடைபெறுகிற
போராட்டத்தின் ஒரு பகுதி ஆதரவு தர வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது சுப்புராயன் எம்.பி.,மாநில செயலாளர் முத்தரசன்,மாவட்ட செயலாளரும்,தளி எம்எல்ஏ.வுமான ராமச்சந்திரன்,மாநில குழு உறுப்பினர் லகுமையா உள்ளிட்டபலர் உடனிருந்தனர்.