ஓடாத பள்ளி வாகனங்களுக்கு வரி விலக்கு தர்மபுரி ஆர் டி ஓ தாமோதரன் தெளிவான விளக்கம்

 ஓடாத பள்ளி வாகனங்களுக்கு வரி விலக்கு; தர்மபுரி ஆர். டி. ஓ. தாமோதரன் தெளிவான விளக்கம்.


கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் இன்று வரை  பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்கப்படாமல் இருக்கின்றது இதனால் சாலையில் ஓடாத இந்த வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு தினந்தோறும் வலியுறுத்தி வந்தது.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக போக்குவரத்து ஆணையர் 7.9. 2021 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன் படி 30 9 2021க்குள் ஓடாத பள்ளி வாகனங்களுக்கு SPR A (Stopage Report) சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பித்து வாகன வரி தீர்வை (Tax Nill Assessment)  செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஏப்ரல் 2020 முதல் 30 செப்டம்பர் 2021 வரை ஒரு வாகனத்திற்கு  Stoppage கட்டணமாக 2520 வரை செலுத்த வேண்டும் இப்படி கட்டணம் செலுத்தி Stoppage சான்றிதழ் பெற்றவர்களுக்கு   இந்த கால கட்டத்திற்கான வரி மற்றும் அதற்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த காலகட்டத்தில் காண இன்சூரன்ஸ் செலுத்தபட்டிருந்தாலும், வாகனங்களுக்கான வரி செலுத்த பட்டிருந்தாலும் அவை அனைத்தும் இனி வரும் காலங்களுக்கு சேர்த்து  நீட்டித்து வழங்கப்படும்

இது தொடர்பாக தெளிவான விளக்கம் பெற தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்களை தொடர்பு கொண்டோம். இந்த Stoppage பற்றிய தெளிவில்லாமல் இன்னும் பல பள்ளி கல்லூரி தாளாளர்கள் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்து கல்லூரி, பள்ளி தாளாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி போதுமான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது அதில் கூட கலந்துகொள்ள பலர் முன் வரவில்லை அதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள வாகன ஆய்வாளர்கள் மூலம் கூட்டங்கள் நடத்தி போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இப்போது தான் பலர் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளார்கள்.

எங்களை பொறுத்தவரை பள்ளி கல்லூரி தாளாளர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் நீங்கள் எந்தவித இடைத்தரகர்களையும் நம்பாமல் தாரளமாக நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம். இதில் கடந்த காலங்களில் இருந்த இடர்பாடுகள் அனைத்தையும் நீக்கிதாராளமாக எளிதாக எங்களை தொடர்பு கொள்வதற்கு வழி வகை செய்துள்ளோம்.

பள்ளி கல்லூரி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் கடந்த 18 மாதங்களாக சாலையில் ஓடாத வாகனங்கள் எந்த நிலையில் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது அதை அப்படியே பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் எந்த நேரத்தில் என்ன நிகழுமோ தெரியாது எனவே இந்த வாகனங்களை இயக்குவதற்கு முன்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் அவற்றை பராமரிப்பு செய்ய வேண்டும்.

பள்ளி கல்லூரி மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்து பத்திரமாக கொண்டு போய் விட வேண்டும் எனவே இந்த விஷயத்தில் நாங்கள் சற்று கடுமையாகத்தான் இருப்போம். எனவே சாலையில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் FC, Insurance, Tax அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் இவை இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் எவ்வித  தாட்சண்யமும் காட்டாமல் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் இதுவரை இப்படி இயக்கப்பட்ட 2, 3 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம் என்றார் .

சாலையில் இயக்காத பள்ளி கல்லூரி வாகனங்களுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் SPR கொடுத்தால் அந்த வாகனங்களுக்கு இயக்கப்படாத காலத்திற்கான வரி தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.