தவ்ஹித் ஜமாத் சார்பில் மூன்று மாத தொடர், பிரச்சாரத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம்

 தவ்ஹித் ஜமாத் சார்பில் மூன்று மாத தொடர், பிரச்சாரத்திற்கான  செயல்வீரர்கள் கூட்டம்  

ராமநாதபுரம் செப்-27

ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கஞ்சா மது விபச்சாரம் மொபைல் விளையாட்டு உள்ளிட்ட போதையில்  சிக்கி சீரழியும் மக்களை சீர்படுத்தும் வகையில் சமூக தீமைகளுக்கு எதிராக (செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 25) வரை மூன்று மாத தொடர் பிரச்சாரத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது அவர்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் மாவட்ட பேச்சாளர்கள் தொண்டர்கள் என கலந்துகொண்டனர். இந்த செயலுக்கு கூட்டத்தில் மாநில செயலாளர் நெல்லை ஃபைசல் அவர்கள், கலந்துகொண்டு இளைஞர்களை போதைப்பொருட்கள் மூலம் வலி தவர தவறு செய்ய மிகப் பெரிய சதித் திட்டங்கள், செய்யப்படுகிறது.


இதை கவனத்தில் கொண்டு தவறான வழி செல்லும் நமது சமுதாய இளைஞர்களை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் தவா மூலம், வென்றெடுக்க வேண்டும் என்று உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணைத்தலைவர் முகமது பஷீர், மாவட்ட துணைச் செயலாளர்கள் மன்சூர், தஸ்தகீர், ஜியாவுல்ஹக், சுல்தான், யாசர்,  மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு