லஞ்சம் வாங்க கூச்சப்படாத அரசு ஊழியர்கள்: ஐகோர்ட் நீதிபதி வேதனை
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதே இல்லை,'' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் லஞ்சம் பெற்ற போது கைதான மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது:
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கூச்சப்படுவதே இல்லை.
லஞ்ச வழக்கில், ஒருவரை கைது செய்தால், அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டும்.
போலீசாரின் விசாரணை பெயரளவில் உள்ளது.
முறையான விசாரணை இல்லை.
லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவிலேயே உள்ளது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.