டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் செப்-08 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தலைநகர் டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு மாவட்டம் தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் சபியா என்கிற பெண் காவலர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் 08.9. 2021 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் அவர்கள் தலைமை  ஏற்றார். மாவட்ட செயலாளர் ஆர். ஆரிப்கான், மாவட்ட துணைத்தலைவர் முகமது பஷீர், மாவட்ட துணைச் செயலாளர்கள்  மன்சூர், தஸ்தஹீர்  ஜியாவுல் ஹக், சுல்தான்,யாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது,  உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காவல்துறையில் பணியாற்றிய காவல்துறையில் பணியாற்றிய பெண் காவலருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  21 வயதான பெண், மனித மிருகங்களால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் காவலரின் உடல் சிதைக்கப்பட்டு கற்பழித்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். என்று கண்டன உரை ஆற்றினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.Nஅன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு