தலைநகர்டெல்லியில், காவல்துறை பெண் அதிகாரி, சபியாவுக்கு நேர்ந்த, கூட்டு பாலியல் வன்கொலையை கண்டித்து, நீதி வேண்டி மேலப்பாளையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

 தலைநகர்டெல்லியில், காவல்துறை பெண் அதிகாரி, சபியாவுக்கு நேர்ந்த, கூட்டு பாலியல் வன்கொலையை கண்டித்து, நீதி வேண்டி மேலப்பாளையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி,செப்.7:' தலைநகர் டெல்லியில், காவல் துறையில் பணியாற்றிய, பெண் அதிகாரி சபியா, சமூக விரோதிகள் சிலரால், கூட்டு பாலியியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு,         வன்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அந்த கொடூர சம்பவத்துக்கு,நீதி விசாரணை வேண்டியும்,இன்று (செப்டம்பர்.7 ) மாலையில், திருநெல்வேலி மாவட்டம்,  மேலப்பாளையத்தில், மாநகர் மாவட்ட," விமன் இந்தியா மூவ்மெண்ட்" (WOMEN INDIA MOVEMENT) சார்பில், இங்குள்ள "சந்தை ரவுண்டானா" அருகில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு,

'விமன் இந்தியா மூவ்மெண்ட்" அமைப்பின்,  மாநகர் மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஏ.பாத்திமா   தலைமை, வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில்,  "விமன் இந்தியா மூவ்மெண்ட்" அமைப்பின், மாவட்ட துணை தலைவர் நூர் நிஷா,  செயற்குழு உறுப்பினர்கள் நெய்னா அம்மாள், பர்வீன் பானு,ஹாஜி ஆகியோர், "முன்னிலை" வகித்தனர். 

"விமன் இந்தியா மூவ்மெண்ட்" அமைப்பின், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் ரினோஷா ஆலிமா,

"நேஷனல் விமன் ப்ரண்ட்"( NATIONAL WOMEN FRONT) அமைப்பின், மாவட்ட பேச்சாளர் சலீமா நாஸிரி, எஸ்.டி.பி.ஐ. மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்,"மகளிர் விடுதலை இயக்கம்" மாநில துணை செயலாளர்

அமுதா மதியழகன்,

திராவிட தமிழர் கட்சி

மாநில பொது செயலாளர்

கதிரவன்

ஆகியோர்," கண்டன உரை" நிகழ்த்தினர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ,எஸ்.டி.பி.ஐ. ஆகியவற்றின் நிர்வாகிகளும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டனர். சபீயாவுக்கு

நீதி வேண்டும்! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை, விதிக்க வேண்டும்! என்னும்க்ஷகோரிக்கைகளை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசுக்கு எதிராக, "கோஷங்கள்" எழுப்பப்பட்டன.

நூற்றுக்கணக்கான பெண்களும் பங்கேற்று இருந்தனர். ஆர்ப்பாட்ட முடிவில், மாவட்ட ‌பொருளாளர் யாஸ்மின், "நன்றி" கூறினார்.