நமது சங்கத்தின்மாநில செயற்குழு கூட்டம் 19.09.2021ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

நமது சங்கத்தின்மாநில செயற்குழு கூட்டம் 19.09.2021ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

 


மாநில மாவட்ட ஒன்றிய சங்கத் தலைவர்களின் கவனத்திற்கு....

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் சனிக்கிழமை 18.09.2021 காலை 10 மணிக்கு சென்னை பம்மல் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்துவதாக முடிவு எடுத்திருந்தோம்.

 அதே தேதி அனைத்து சங்கங்களையும் அழைத்து மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர் அதிகாரிகளுடன் இணைந்து சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி பள்ளிக்கல்வித்துறையில் செய்ய உள்ள புதிய பல்வேறு மாற்றங்கள் குறித்து நல்லதொரு முடிவு எடுக்கவும் நமது கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்கள்...

 எனவே அதே தேதியில் நாம் நமது சங்கத்தின்மாநில செயற்குழு கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் நமது மாநில செயற்குழு கூட்டத்தை

19.09.2021ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக  அறுசுவை உணவுடன் ஆர்ப்பரிப்போடு நடத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.

 எனவே சனிக்கிழமை மாநில மாவட்ட நிர்வாகிகள் வருவதை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு வந்துவிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றேன்.

 இதில் மாறுதல் இருந்தால் அருள்கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

 வெள்ளிக்கிழமை அனைத்து சங்கங்களின் தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு தெரிவிக்கிறோம்.

 இரண்டு கூட்டங்களிலும் எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்தும்...

நமது கோரிக்கைகள் அனைத்தும் வெற்றிபெறவும் என்னென்ன கோரிக்கைகளை அரசிடம் நமது சங்கத்தின் சார்பில் வைக்க வேண்டும் என்பது குறித்தும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளையும் உடனடியாக திறக்க கோரி....நம் சங்கம் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியது  குறித்தும், நடைபெற உள்ள  சட்ட மேலவை தேர்தலில் நமது சங்க நிர்வாகிகள் அனைத்து பட்டதாரிகள் தொகுதியிலும் நமது சங்கத்தின் சார்பில் ஆளும் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றிபெற செய்வது குறித்தும், தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி, தொழில் வரி, ESI, கட்ட வற்புறுத்துவது பள்ளிகளுக்கு சீல் வைப்பது மின் இணைப்பைத் துண்டிப்பது போன்ற காரியங்களை செய்து வருவது சம்பந்தமாக நாம் கடுமையான முடிவுகளை உடனடியாக எடுத்து நமது பள்ளி நிர்வாகிகளை

பள்ளி நிர்வாகிகள் சொத்துக்களை பாதுகாத்திட வேண்டும்.

பள்ளி வாகனங்களுக்கான பல்வேறு வரிகள், டிடிசிபி.எல் பி ஏ. சிஎம்டிஏ...கட்டிட அனுமதி விதி விலக்கு பெறுவது சம்பந்தமாக,.... அனைவருக்கும் தொடர் அங்கீகாரம் உடனே கிடைக்க செய்திட,, அனைத்து பள்ளிகளுக்கும் நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்திட,...  பள்ளிக் கட்டணம் செலுத்தாமல் டி.சி இல்லாமல் சென்றது குறித்தும்..ஆர்.டி.இ கல்வி கட்டணம் உடனே பெறுவது சம்பந்தமாக... நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள் ஆக்குதல்...  7.5% இட ஒதுக்கீடு  தனியார் பள்ளிகளுக்கும் கிடைத்திட.....

புதிய சங்கநிர்வாகிகளை நியமிப்பது சம்பந்தமாக மற்றும் உள்ள பற்பல பிரச்சனைகள் குறித்துப் பேசி நல்லதொரு முடிவு எடுத்திட....

 கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்விருந்தும் விருதுகளும் வழங்கிக் கௌரவித்திட அவசியம் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.

 கலந்து கொள்வோர் தங்கள் பெயர்களை உடனடியாக எங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம் அப்போதுதான் அனைத்தும் தயாராக வைக்க முடியும்.

 அன்புடன் உங்கள

 கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.