கூடுதலாக 1 ரூபாய் வசூல் ; தனியார் பஸ் கம்பெனிக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம்!

 கூடுதலாக 1 ரூபாய் வசூல் ; தனியார் பஸ் கம்பெனிக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம்


திருநெல்வேலி : கூடுதலாக, 1 ரூபாய் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் கம்பெனிக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து, 2017 செப்., 1ல் தனியார் பஸ்சில் திருநெல்வேலியில் இருந்து, துாத்துக்குடிக்கு சென்றார். 

வழக்கமான கட்டணம், 24 ரூபாய்.கண்டக்டர், 1 ரூபாய் அதிகமாக, 25 ரூபாய் வசூலித்தார். 

இசக்கிமுத்து, நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இரண்டு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கண்டக்டர், 1 ரூபாய் அதிகமாக கட்டணம் வாங்கியது, நிரூபிக்கப்பட்டது.

அபராதமாக, 15 ஆயிரம்,நீதிமன்ற வழக்கு செலவு, 5,000, அதிகம் வசூலித்த, 1 ரூபாய் கட்டணம் என மொத்தம், 20 ஆயிரத்து, 1 ரூபாயை இசக்கிமுத்துக்கு வழங்க, தனியார் பஸ் கம்பெனிக்கு, நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.