ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைத்ததை கண்டித்து ஆர்பாட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் . அ.தி.மு.க.பவானி நகர செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைத்ததை கண்டித்தும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்தும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பவானி ஒன்றிய செயலாளர் S.M. தங்கவேல் ,மாவட்ட கவுன்சிலர் கே .கே .விஸ்வநாதன், பவானி நகரத் துணைச் செயலாளர் ஆண்டியப்பன் ,அம்மா பேரவை A.C.முத்துசாமி ,K. ஸ்ரீனிவாசன் முன்னாள் கவுன்சிலர், விறகு ஆறுமுகம் எம்ஜிஆர் அணித்தலைவர், TVL தனபால் அம்மா பேரவை ,ITWing மாவட்ட இணைச் செயலாளர் பிரகாஷ், ITWing நகரச் செயலாளர் பிரபாகரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.