திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.


ஆகஸ்ட்-27

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று அதன் தலைவர் திருப்புல்லாணி தலைமையில் நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் சிவலிங்கம் ஆணையர் ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி விஜய் மேகலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதில் பெரியபட்டணம் ஏழாவது வார்டு உறுப்பினர் பைரோஸ் கார் பேசுகையில், பெரியபட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெரியபட்டணம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளி நிர்வாகம் 1979ஆம் ஆண்டு அரசுக்கு மூன்று ஏக்கர் இடம் எழுதிக் கொடுத்தார்கள் அதை அரசு அதிகாரிகள் பட்டா மாற்றததாலும்   சுற்றுச்சுவர் எடுக்காததாலும் சிலர் இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். இதை மாவட்ட நிர்வாகமும்  சுகாதாரத் துறையும் தலையிட்டு அபகரிக்கப்பட்ட நிலத்தை எடுக்க வேண்டும் களிமண்.குண்டு கிராமத்தில்  பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கக் கூடியதாகவோ மிகவும் பாழடைந்து இருக்கும் புயல் பாதுகாப்பு இல்லத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும், எனவும் கோரிக்கை வைத்து பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு