ஓசூர் எம் எல் ஏ ஒய் பிரகாஷின் மகன் கார் விபத்தில் பலி

ஓசூர் எம் எல் ஏ ஒய் பிரகாஷின் மகன் கார் விபத்தில் பலி

ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் சென்ற ஆடி கார் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் அவர்களின் மகன் கருணா சாகர்(24). இவருடன் ஆடி காரில் 6 பேர் பயணித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் ஏற்ப்பட்ட கோர சாலை விபத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

சாலை தடுப்பில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பெண்கள் உள்பட,7 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கர்நாடாக மாநிலம் ஆடுகோடி போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் பெங்களூர் செய்ன்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  அதிவேகமாக காரை இயக்கியது தான் விபத்துக்கு காரணம் என்று என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மது போதையில் அதிவேகமாக காரை இயக்கியது விபத்துக்கு காரணம் என்ற தகவல் ஒருபுறம் பரவிக் கொண்டிருந்தாலும் அவருடன் பயணித்து இறந்துபோன மூன்று பெண்கள் யார்...? அவர்கள் பின்னணி என்ன என்பது பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மனைவி இறந்து சில மாதங்களே ஆன நிலையில் மகனையும் பறிகொடுத்து தவிக்கும் எம்எல்ஏவுக்கு என்னவென்று ஆறுதல் சொல்வது...? இது ஓசூர் தொகுதி மக்களின் தவிப்பு