6 - 8 மாணவர்களுக்கு ஆறாம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.....!?

6 - 8 மாணவர்களுக்கு ஆறாம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.....!?

Corona பரவல் குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்துள்ளன. ஆனால் மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துவருவதால் தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக உறுதியாக சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரி அரசும் செப்டம்பர் 1ஆம் தேதி திறப்பதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் ஆறாம் தேதி முதல் வகுப்புகள் துவங்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் பள்ளிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் திறக்கவும், ஒரு நாள்‌ விட்டு ஒரு நாள் மட்டும் மாணவர்கள் வகுப்பில் பங்கேற்றால் போதும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி பள்ளிகளுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் 6 - 8 வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் திறக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்