ஆவின் பால் விலை பட்டியல் வெளியீடு
ஆவின் பாலின் குறைக்கப்பட்ட விலைப்பட்டியல் குறித்த அரசாணை வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை ரூ. 3ஆக குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் விலைப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதில், சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 43லிருந்து ரூ. 40ஆக குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், மே 16 முதல் இந்த புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.