எலி மருந்து சாப்பிட்டு தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை....... தனியார் பள்ளி ஆசிரியரின் மரணத்திற்கு தமிழக அரசு காரணமா....?
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி.
இவர் சிறுபாக்கம் தாகூர்மெட்ரிகுலேஷன பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் மங்களூரில்
உள்ள தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஒரு வருடமாக பள்ளி இல்லாததால் வருமானம் இல்லை.
ஆறு மாதத்தில் நிலமை சரியாகும் என்று கடன் வாங்கி குடும்பம் நடத்தினர்.
மாதம் ஆக ஆக கடன் சுமை அதிகமானது. வருடம் முடிந்ததால் கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்கிறார்கள்.
வீட்டு வாடகை பாக்கியும் மளிகை கடனுக்கும் பதில் சொல்ல முடியாமல் மனமுடைந்த பத்மாவதி நேற்று எலி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இறந்தார்.
சிறுபாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி திறப்பதற்குள் இன்னும் எத்தனை ஆசிரியர்கள் .... ?
இந்தியா முழுதும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலைமை இதுதான்!
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் மரணத்திற்கு காரணம் மத்திய மாநில அரசுகள் தான் என்பதை மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.
இன்னும் எத்தனை காலம் இப்படியே பள்ளிகளை மூடி வைப்பீர்கள் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றார் பாரதியார்..
வயிற்றுக்கே வக்கில்லாமல் வாழ்விழந்து நிற்கும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் யார்.... தனியார் பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் பொது மக்களும் அரசும் இனியும் மௌனம் காப்பது ஏன்?...
பள்ளிகள் விரைவில் துவக்கப்படும் என்கிற நம்பிக்கை கூட தர முடியாத அரசு தனியார் பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும் தற்கொலைக்கு தூண்டுவதற்கு சமமாகும்....
நாளையோடு தேர்தல் முடிவுகள் வந்த பின்னால் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்....
இனி ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் கூட மரணிப்பதை ஏற்கவோ மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் துணிந்து நின்று போராட வரவேண்டும்..
இனியும் இப்படியே போனால் பள்ளி நிர்வாகிகள் மரணத்தைக் கூட தவிர்க்க முடியாது..
வறுமையில் வாடி வதங்கி சோறு சாப்பிட முடியாமல் எலி மருந்து சாப்பிட்ட என் அன்பு சகோதரிக்கு கண்ணீர் அஞ்சலியை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டு அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
அவர் இறுதிச்சடங்கிற்கு நமது கடலூர் மாவட்ட சங்க தலைவர்கள் தங்களால் ஆன அத்துணை பொருளாதார உதவிகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்....
வறுமையில் வாடி வதங்கி கொண்டிருக்கும் என் அன்பு ஆசிரிய சகோதர சகோதரிகளுக்குஇன்றும் பக்கபலமாக இருப்போம் என்கிற உறுதியோடு....
ஆழ்ந்த வருத்தத்துடன்......
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட தலைவர்கள்.