
நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாகக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி நம்மைவிட்டு பிரிந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது மறைவு இன்றளவும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
நடிகர் விவேக்கிற்கு நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பது அவரது ஆசை.இந்த கனவு இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது, ஆனால், இதுவரை பாதி படம் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், படத்தில் அவரது காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காரணம் விவேக் போலீஸ் அதிகாரியாக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதனால் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்து முழு கதாபாத்திரம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது விவேக்கிற்கு பதிலாக படத்தில் நடிக்க சில இளம் நடிகர்களின் பெயர் அடிபடுகின்றன.
இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.