புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழில் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா......?
மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கை - 2020, இந்தியாவின் முக்கியமான மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப் படவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்திலிருந்துதான் இதற்கான முதல் குரல் ஓங்கி ஓலித்தது. தொடர்ந்தும் ஒலிக்கிறது. ஆரம்பத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மட்டுமே வெளியிட்டதை அடுத்துதான் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இப்போது, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. நேபாளி மொழியில்கூட வெளியிட்டுள்ளனர். ஆனால், தமிழ் மொழிபெயர்ப்பு வெளியாகவில்லை என்பதுதான் பேரதிர்ச்சி.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களும் மத்திய அரசின் தமிழுக்கு எதிரான போக்குக் குறித்து கடும் கண்டங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
``அந்தக் கல்விக் கொள்கையில் என்ன இருக்கிறது என்பது தமிழர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது. அப்படி பரவலாக தமிழர்களுக்குத் தெரிந்துவிட்டால் எதிர்ப்புகள் கிளம்பி, வழக்கம்போல இந்தியா முழுக்க பரப்பிவிடுவார்கள். அது மத்திய அரசுக்கு பிரச்னையை உண்டாக்கும் என்கிற நோக்கத்துடன்தான் திட்டமிட்டே தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை. தேர்தல் நாள் வரை பிரசார மேடைகளிலும், `மன் கி பாத்' நிகழ்ச்சியிலும் தமிழை உயர்த்திப் பிடித்து முழங்கிய நரேந்திர மோடி அரசின் உள்நோக்கம் இப்போது வெளிப்பட்டு விட்டது'' என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இது இப்படியிருக்க, தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை 2019-ம் ஆண்டு வைத்தபோதே, தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளும் கூடவே தமிழகத்தில் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட கிளை அமைப்பு சார்பாக, கூகுள் உதவியுடன் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. கூகுள் மொழிபெயர்ப்பு என்பதால் சிற்சில தவறுகளுடனும், கடுமையான மொழி நடையிலும் அது அமைந்திருக்கிறது. ஆனாலும், புதிய கல்விக் கொள்கை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஓரளவு அது உதவியாகவே இருக்கிறது.
இதேபோல புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சிறுசிறு வெளியீடுகளாக தமிழில் பல நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. முழுமையான மொழி பெயர்ப்புக்கான வேலைகளும் நடக்கின்றன. ஆயிரம் இருந்தாலும், அரசாங்கமே அதைச் செய்திருக்க வேண்டும் என்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆனால், வேண்டுமென்றே செய்யாமல் விட்டிருக்கிறது மத்திய அரசு. இது தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு இருக்கும் வெறுப்பு உணர்வை பட்டவர்த்தனமாகக் காட்டுவதாகவே இருக்கிறது.
நாமக்கல் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மொழிபெயர்ப்பும் ஒன்றும் வெளியானது. போலவே, `மக்களின் மொழிபெயர்ப்பு' என்ற வெர்ஷனும் பரவலாக அதிகம் பகிரப்பட்டது. அதைத் தரவிறக்க இங்கே க்ளிக் செய்யவும்:
https://bookday.co.in/wp-content/uploads/2020/08/NEP_2020_Tamil_PrivateTranslation
புதிய கல்விக் கொள்கை குறித்த இந்த மொழிபெயர்ப்பு கூட உங்களுக்கு முழுமையான விளக்கத்தை தராது. மத்திய அரசு தற்போது கொண்டு வர உள்ள முழுமையான புதிய கல்விக் கொள்கை குறித்த தெளிவான விளக்கங்களை மக்களாட்சி மற்றும் மெட்ரிகுலேஷன் நியூஸ் பத்திரிகை ஆசிரியர் கே ஆர் ரவிச்சந்திரன்160 பக்கங்களில் எழுதியுள்ள ஒரே தேசம் ஒரே கல்வி என்கிற நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் மிக விரைவில் வெளிவர உள்ளது தேவைப்படுவோர் தங்கள் பிரதிக்கு முன்பதிவு செய்யுங்கள். விலை ரூ 100 மட்டுமே தொடர்புக்கு : 94429 43123