
கொடைக்கானலில் ரெஸ்ட் எடுத்து வரும் திமுக தலைவரின் ஒவ்வொரு அசைவும் தற்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக அவர் எடுத்து வரும் லிஸ்ட் பற்றின தகவல்கள் கசிந்தபடியே உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி கொண்டிருந்தபோதே, திமுக சற்று தெம்பாகி விட்டது.. சாதகமான கணிப்புகள் பெருமளவு வந்தாலும், திமுக தலைவர் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்..
அதேபோல, இத்தகைய கணிப்புகளால் ஓவர் குஷியாகி, தொண்டர்கள் கடைசி நேரத்தில் அசால்ட்டாக இருந்து விடக்கூடாது என்பதற்காக, அலர்ட் செய்து கொண்டே இருந்தார்.
எத்தனையோ அறிக்கைகளையும் தொண்டர்களுக்கு வெளியிட்டு, அட்வைஸ் செய்து கொண்டே இருந்தார்.. இதனால் கடைசி நிமிஷம் வரை தொண்டர்கள் களப்பணியில் மூழ்கி கிடந்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு அன்றும், அந்த வாக்குகள் யாருக்கு சாதகமாக டிரான்ஸ்பர் ஆகியிருக்கின்றன என்பதை கொண்டும் ஆய்வுகள் செய்யப்பட்டதாகவும், அந்த ஆய்வுகளின் அடிப்படையிலும் திமுகவுக்கே பெரிய பிளஸ் காத்து கிடப்பதாகவும் செய்திகள்அவருக்கு ஆதரவான வர்களிடமிருந்து வந்தவண்ணம் இருந்தன.
இதற்கு பிறகுதான் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அடுத்த அமைச்சர்கள் யார்? என்பது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.. 4 நாட்களுக்கு முன்பு திமுகவின் உத்தேச அமைச்சர்கள் என்ற பெயரில் ஒரு லிஸ்ட் சோஷியல் மீடியாவிலும் சுற்றி கொண்டிருந்தது.. இந்த சமயத்தில்தான் திமுக தலைவர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.. அங்கு அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.
அமைச்சர் பதவியை, வழக்கம்போல் திமுகவின் சீனியர்கள் கேட்டு வருகிறார்கள் என்று தெரிகிறது.. கிட்டத்தட்ட பெரும்பாலான முன்னாள் அமைச்சர்களே மறுபடியும் தங்களுக்கு பதவி கேட்டு வருகிறார்களாம்.. எனினும் திமுக தலைமை பொறுமையாக இருக்கிறதாம்.. அமைச்சர்கள் லிஸ்ட்டை உதயநிதி ஒரு பக்கமும், சபரீசன் மறுபக்கமும் தயார் செய்து வருகிறார்களாம்.
இவர்கள் இருவரும் தயார் செய்து தந்த லிஸ்ட் அடிப்படையில்தான் ஸ்டாலின் அவைகளை பரிசீலித்து வருகிறாராம். உதயநிதியும் சரி, சபரீசனும் சரி, பார்த்து பார்த்து லிஸ்ட்டை எடுத்தார்களாம்.. இதை வைத்துதான் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறாராம்.. அமைச்சர் பதவி கேட்போருக்கு வழக்கு பின்னணி இருக்கிறதா? அந்த வழக்கின் தன்மை எத்தகையது என்பது பற்றிய ஆலோசனையையும் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளாராம்.
ஒருவேளை இந்த தகவல் உண்மை என்றால், சில சீனியர்களுக்கு அமைச்சர் பதவி கிட்டுவதில் சிக்கல்தான் ஏற்படும் என்கிறார்கள்.. மற்றொரு புறம், நிறைய புதுமுகங்களுக்கும் அமைச்சர் பதவி தரப்படும் என்கிறார்கள்.. அதனால், ஒரு பக்கம் மகன், இன்னொரு பக்கம் மருமகனை உட்கார வைத்து இந்த இறுதி லிஸ்ட் ரெடியாகி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன..!
இதற்கிடையே இணையதளங்களில் யூட்யூப் சேனல்களில் வெளிவருகின்ற லிஸ்ட் பார்க்கும்போது ஆளாளுக்கு அவர்களே அமைச்சர் பதவி கேட்பதுபோல் ஆட்களைத் தூண்டி விட்டு செய்திகளை வெளியிட்டு கொண்டுள்ளனர் இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த மாவட்டத்தில் இவருக்குத்தான் அமைச்சர் பதவி இவருக்கு இல்லை என்கிற விவாதங்களும் அரங்கேறிக் கொண்டிருப்பது திமுகவை மிகப் பெரிய ஆபத்தில் தள்ளி கொண்டுள்ளது.
முதலில் யார் ஜெயிக்கிறார்கள் யார் தோற்கிறார்கள் என்றே தெரியவில்லை இந்த நிலையில் அவர் தான் அமைச்சர் இவர்தான் அமைச்சர் என்கிற பட்டியல் பொதுமக்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
போகிற போக்கை பார்த்தால் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது போல் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ஆனால் தாங்கவே முடியாது. இவங்களே ஓவரா ஏத்தி கொடுத்து கவித்து விடுவாங்க போல இருக்கு.
ஒரு பத்து நாள் கம்முன்னு இருங்க .... எதையும் மக்கள் முடிவு செய்வார்கள். அதுவரை அமைதி காப்போம்.