ஜனாதிபதி விருது வாங்க தகுதியான ஊராட்சி மன்ற தலைவர் யார்?

 ஜனாதிபதி விருது வாங்க தகுதியான ஊராட்சி மன்ற தலைவர் யார்?

1)ஊராட்சியில் வீதி தோறும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும்,

2) ஊரின் மத்திய அல்லது ஒதுக்குப்புறத்தில் பூங்காக்கள் அமைக்க வேண்டும்,

3) தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு மற்றும் தெருவிளக்குகள் பராமரிக்கபட வேண்டும்,

4) நூலகம் சிறப்பாக செயல்பட வேண்டும்,

5) ஊராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு அதனைப் பராமரிக்க வேண்டும், 

6) தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்,

7) அரசின் மானியத்தோடு பொது அங்காடி அமைக்க வேண்டும்,

8) ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான இடத்தில் சிறிய பாலம் அமைக்க வேண்டும்,

9) பொதுக்கழிப்பிடம் அமைத்து அதனை தினந்தோறும் பராமரிக்க வேண்டும்,

10) பொது தங்கும் விடுதி ஒன்று அமைக்க வேண்டும்,

11) ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான இடத்திற்கு தரமான 

தார் & சிமெண்ட் சாலைகளை அமைத்து அதனை பராமரிக்க வேண்டும்,

இந்த பணிகள் அனைத்தும் ஊராட்சி மன்ற தலைவருக்கு கட்டாயப் பணிகள்!

 இதை மட்டும் செய்தாலே போதும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்க்கான குடியரசுத் தலைவர் விருது பெற தகுதியான தலைவராக அறிவிக்கப்படுவார்கள்!