ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களின் அத்துமீறல்கள்
ஈரோடு மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களாக சதீஷ்குமார் மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சதீஷ் ஆகியோரின் அதிகாரத் அத்துமீறல்கள் செய்தியாளர்களுக்கு மத்தியில் பெரும் கொதிப்படையச் செய்துள்ளது. அரசாங்கத்துக்கும் செய்தியாளர்களுக்கும் பாலமாக விளங்க வேண்டிய அரசாங்க அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய முறையான தகவல்கள் மற்றும் பேருந்து இலவச அடையாள அட்டை, தேர்தல் அடையாள அட்டை போன்ற அடிப்படை அரசாங்க சலுகைகளை கூட செய்தியாளர்களுக்கு முறையாக தராமல் கேள்வி கேட்பவர்களை ஒருமையில் பேசி மதிக்காமல் நடந்து கொள்கின்றனர். அதிகாரிகளின் இச்செயல்கள் செய்தியாளர்களுக்கு மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிகார அத்துமீறல்களை ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கதிரவன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.