பேராவூரணியில் முக கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிப்பு
பேராவூரணி, ஏப்.10-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து அதனை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
முககவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சுகாதார துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பேராவூரணி காவல்துறையினர் அண்ணா சிலை அருகில் நேற்று மாலை முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 10 க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர்.பேருந்து ஓட்டுநர்,நடத்துனர், கார், வேன், ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள் முக கவசம் அணிய வலியுறுத்தினர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.