2001 க்கு முன் கட்டப்பட்ட பள்ளி பழைய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெற கால அவகாசம் வழங்க வேண்டும் ; நந்தகுமார் கோரிக்கை
அனுப்புதல்....
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
No. 6 ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை.75. செல்.. 944 39 64053. ஈமெயில். matriculationnews 2011@gmail. com.
பெறுதல்
உயர்திரு இயக்குனர் அவர்கள்.
நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சித்துறை. டிடிசிபி டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங் ஆபீஸ்.கோயம்பேடு சென்னை .
பொருள்.... தனியார் பள்ளி 2011 க்கு முன் கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெறுவது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும் அரசாணை எண்.. 76.
நடைமுறைப்படுத்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டி விண்ணப்பம்.
ஐயா வணக்கம்
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி கட்டிடங்கள் 2011 க்கு முன் கட்டப்பட்டு இருந்தால் அதற்கு உள்ளது உள்ளபடியே உரிய ஆவணங்களை கொண்டு ஒரு சதுர அடிக்கு 7 ரூபாய் 50 பைசா அரசு கருவூலத்தில் கட்டி இணையதளம் வழியாக விண்ணப்பித்து கட்டிட அனுமதி பெறுவதற்கு அரசாணை எண். 76 இன் படி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை தந்த கால அவகாசம் நீட்டிப்பு செய்து தர வேண்டுமாய் எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகின்றோம்.
கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் தொடர்ந்து பள்ளிகள் நடக்காததால் அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பொருளாதார நெருக்கடி உள்ளதாலும் போதுமான ஆவணங்கள் உடனடியாக சமர்ப்பிக்க முடியாததாலும் ஆங்காங்கு இணையதள வழி இணைப்பு கிடைக்காததாலும் சம்பந்தப்பட்ட கட்டிட பொறியாளர்கள் அதற்கான கட்டிட ப்ளூ பிரிண்ட் போட்டு தருவதில் உள்ள குளறுபடிகள் ஏராளமாய் உள்ளதால் பல பள்ளி நிர்வாகிகளுக்கு இது சம்பந்தமான முழு விவரமும் தெரியாததால் சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் தெரிவிக்காததால் பல பள்ளி நிர்வாகிகள் ஓராண்டு காலமாக பள்ளிக்கு வராமல் பாடம் நடத்த முடியாமல் கல்வி கட்டணம் வராமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளதால் கடைசி நான்கு நாட்கள் தொடர்ந்து அனைத்து வங்கிகளும் செயல்படாததால் மேற்கண்ட கட்டணத்தை கட்டி அவர்களால் விண்ணப்பித்து பழைய பள்ளி கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்ல இது தேர்தல் காலம் இக்காலத்தில் உடனடியாக எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது.
மேலும் நீலகிரி கொடைக்கானல் ஏலகிரி ஏற்காடு போன்ற மலை மாவட்டங்களுக்கு அரசாணை 76 இன்படி பொருந்துமா பொருந்தாதா என்று தெளிவான விளக்கம் இல்லை எதுவெல்லாம் திட்டமிடப்பட்ட பகுதி எதுவெல்லாம் திட்டமிடாத பகுதி என்கிற தெளிவையும் தெளிவுபடுத்த வேண்டும் . பழைய கிராமப்புற பகுதிகளுக்கு கூட இந்த அறிவிப்பு பொருந்தவில்லை . பள்ளி கட்டிடம் கட்டும்போது கிராமமாக பேரூராட்சியாக இருந்தவை எல்லாம் இன்றைக்கு
நகராட்சியாக மாநகராட்சியாக
மாறி உள்ளதால் அவர்களுக்கு என்ன செய்வது என்ற ஒரு தெளிவான விவரம் இல்லை.
எனவே அதையும் தெளிவுபடுத்தினால் தான் இந்த பள்ளிகள் பாதிப்படையாமல் இருக்கும்.
திட்டமிடப்பட்ட பகுதியான மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே 2011 இல் கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை என்ன அவர்களுக்கும்
இந்த அரசாணையின் படி 7 வயது 50 கட்டி கட்டிட அனுமதி பெற ஒரு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
எனவே அருள் கூர்ந்து மேற்கண்ட குறைபாடுகள் இந்த அரசாணையில் உள்ளதை மனதில் நிறுத்தி அனைத்து வகை பள்ளிகளும் இந்த சட்டத்தின் கீழ் பயன் பெறத்தக்க வகையில் அனைவருக்கும் தெளிவான விளக்கம் தந்து ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் தந்து கட்டிட அனுமதி அனைவருக்கும் கிடைத்திட ஆவன செய்ய வேண்டுமாய் எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன் தங்கள் உண்மையுள்ள
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்
நாள் ...25 3 20201