ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தொப்பி அப்பா முகம்மது கனி ஆலிம் கல்வி குழு துவக்க விழா

 ராமநாதபுரம் மார்ச்-28


ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தொப்பி அப்பா முகம்மது கனி ஆலிம் கல்வி குழு துவக்க விழா மற்றும் மர்கஸ் அல்இஹ்ஸான் கல்வி குழு  "முபல்லிகா" பட்டமளிப்பு (ஸனது) வழங்கும் விழா (2021)




ராமநாதபுரம் மாவட்டம் தொப்பி அப்பா முகம்மது கனி ஆலீம் கல்வி குழு துவக்க விழா முப்பல்லிகா (ஸனது) வழங்கும் விழா நிகழ்ச்சி பாசிப்பட்டறை அருகில் உள்ள பல்வகை பயன்பாட்டு கூடத்தில் நடைபெற்றது இதில் பேராசியர் - மர்கஸுல் இஹ்ஸான்-ராமநாதபுரம்  மெளலவி ஹாஃபிழ் அப்துஸ் ஸமது அல்தாஃபீ வரவேற்புரை ஆற்றினார். ராமநாதபுரம் சின்னமு ஹல்லம் தலைமை இமாம் மௌலவி முகம்மது சித்திக் அலி ஸிராஜி துவக்க உரை ஆற்றினார். பாசிப்பட்டறை பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அப்துல்காதிர் ஸிராஜி, பெரிய முஹல்லம் தலைமை இமாம் ஹாஜி மெளலவி அகமது இப்ராஹிம் மஸ்லஹி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 



மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையை மௌலவி அகமது இப்ராஹிம் ஹழ்ரத் ராமநாதபுரம்  மாவட்ட தலைவர் ஜமாத்துல் உலமா சபை  ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூத்த தலைவர் மௌலவி அப்துர்ரஹ்மான் மிஸ்பாகி ஹழ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவிகள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாட்டினை தொப்பி அப்பா முகம்மது கனி ஆலிம் டிரஸ்டினர் செய்திருந்தனர். 

ராமநாதாபுரம் மாவட்டம் செய்தியாளர் M.N.அன்வர் அலி  N.A. ஜெரினா பானு