ஸ்டாலின் பதவிவெறி பிடித்து அலைகிறார்; அவருக்கு நிர்வாக திறமை தெரியாது.. அன்புமணி!
ஸ்டாலின் பதவிவெறி பிடித்து அலைகிறார்; அவருக்கு நிர்வாக திறமை தெரியாது.. அன்புமணி!




ஒரு முதலாளிக்கு நடக்கும் ஒரு போராகத்தான் இந்த தேர்தலை நான் பார்க்கிறேன் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். திமுக என்றாலே அரஜாகம், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துதான் என்றும் அவர் குற்றசாட்டினார். கச்சதீவு, காவிரி உரிமையை தாரை வார்த்து விட்டு தற்போது அதை மீட்டெடுப்பது போல் ஸ்டாலின் நடிக்கிறார் என்றும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.பி.கந்தனை ஆதரித்து சோழிங்கநல்லூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

 கே.பி.கந்தனை நீங்கள் வெற்றி பெற வைத்தால் விவசாயியான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்.விவசாயிக்கும், ஒரு முதலாளிக்கும் நடக்கும் ஒரு போராகத்தான் இந்த தேர்தலை நான் பார்க்கிறேன். 

திமுக என்றால் ரவுடியிசம்

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. மு.க.ஸ்டாலின் ஒரு முதலாளி. இதில் நிச்சயமாக விவசாயிதான் வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதி ஐ.டி. நிறுவனங்கள், படித்தவர்கள் நிறைந்த தொகுதி. எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் எதுவும் இல்லாமல் தமிழகத்தில் அமைதியான ஆட்சி நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த அமைதி சீர்குலைந்து விடும். திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். 

திமுக என்றாலே அரஜாகம், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துதான். ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை தெரியாது பிரியாணி கடைல பிரியாணி சாப்பிட்டு காசு கேட்டால் அடிப்பது, செல்போன் கடையில் செல்போனை வாங்கி விட்டு ஒடிப்போவது ஆகியவற்றை செய்வதை திமுகவினர் வழக்கமாக வைத்துள்ளனர். 

பியூட்டி பார்லரில் பெண்களை எட்டி உதைக்கிறார்கள். இந்த ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைவரும் நலமுடன் உள்ளனர்.அரசு பள்ளிகளில் படித்தால் மருத்துவராகலாம் என்ற கனவை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழகத்தின் முதல்வராக இருக்க நிர்வாக திறமை அவசியம். ஆனால் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை தெரியாது. சமூக நீதி தெரியாது திமுகவை கூட ஸ்டாலினால் நிர்வாகம் செய்ய முடியவில்லை. 

பிகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர்தான் திமுகவை நிர்வாகம் செய்து வருகிறார். திமுகவில் வேட்பாளர், மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வது பிரசாந்த் கிஷோர்தான். 

ஸ்டாலின் பதவி வெறி பிடித்து அலைகிறார். தனக்கு அப்புறம் பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் ஆகியோர் பதவியில் அமர வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். துரைமுருகன் பெரிய அரசியல்வாதி. ஆனால் அவர் உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி நிற்கிறார். அரசியலுக்கு வர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் கொள்கை, கோட்பாடு, திமுகவின் வரலாறு, சமூக நீதி என எதுவும் தெரியாது.

அதிமுகவின் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500 வழங்கும் திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன். கல்விக்கடன் திட்டம் எல்லாம் மிகப்பெரியது. ஸ்டாலின் சொல்வது எல்லாம் பொய். ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் செய்து காட்ட மாட்டார். அது வேற்று அறிவிப்புதான். 

ஆனால் முதல்வர் விவசாய கடன்களை செய்து காட்டியுள்ளார். கச்சதீவு, காவிரி உரிமையை தாரை வார்த்து விட்டு தற்போது அதை மீட்டெடுப்பது போல் ஸ்டாலின் நடிக்கிறார். வன்னியர் உள் இடஒதுக்கீட்டு என்பது ஒரு ஜாதிக்கு மட்டும் உண்டானது அல்ல. இது சமூக நீதி வளர்ச்சிக்கான ஒரு அறிவிப்பாகும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்