தனியார் பள்ளி ஆசிரியர்கள் லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணி......
நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Kanna ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆர்.டி.இ. மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக தர வேண்டும் என்பதற்கான
அரசு அனைத்தும் இலவசமாக தந்தால் தனியார் பள்ளிகள் தர தயார் இல்லையென்றால் தரமுடியாது என்றும்....
உடனடியாக அனைத்து பள்ளிகளும் அனைத்து வகுப்புகளும் திறக்கப் பட வேண்டும்.
100% அனைவரும் கல்வி கட்டணம் கட்டுவது உறுதி செய்ய வேண்டும்.
அனைவருக்கும் தேர்வுகள் நடத்தி தேர்ச்சி முடிவுகள் வெளியிட வேண்டும்.
டி .சி.இல்லாமல் எந்த பிள்ளைகளையும் எந்த வகையிலும் எந்த பள்ளியிலும் யாரையும் சேர்க்கக் கூடாது.
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் சொத்து வரி கட்டாமல் இருக்க விதிவிலக்கு ஆணையைப் பெற்று தருவது என்று முடிவு செய்யப்பட்டது.
எஸ். பி. ஆர். பார்ம் கொடுத்து அனைவருக்கும் ஓர் ஆண்டு காலத்திற்கு சாலை வரி விலக்கு பெற வேண்டும்.
எஸ் பி ஆர் பார்ம் கொடுத்து வாங்காத ஆர்டிஓ கல் மீது நடவடிக்கை எடுக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அரசு பள்ளி மாணவனுக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் நீதிபதி நினைத்தால் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் மேல்முறையீட்டில்
கேட்ட கட்டணம் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக மாநில தலைமைச் சங்கம் வழியாக வழக்கு தொடுத்து உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து விட்டு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசுக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான ஆசிரியர்களை ஒன்று திரட்டி மாபெரும் பேரணியை சென்னையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த மருத்தும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான துவக்க அனுமதி தராமல் ஆண்டுக்கணக்கில் கோப்புகளை வைத்துக்கொண்டு தற்பொழுது திருப்பி அனுப்பி வரும் தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் கல்வி பணியில்
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.