மு.க. அழகிரி இடத்தை நோக்கி நகருகிறாரா கனிமொழி... ?

மு.க. அழகிரி இடத்தை நோக்கி நகருகிறாரா கனிமொழி... ?

திமுகவின் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் லோக்சபா எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்ட அமைப்பு செயலாளராக மு.க. அழகிரி வகித்த இடத்தை நோக்கி கனிமொழி நகர்ந்து கொண்டிருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.

திமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்று கனிமொழி அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மக்கள் அளித்த வாக்குகளால் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

திமுகவின் மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார் கனிமொழி. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க மண்டல பொறுப்பாளர்கள் திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கனிமொழி கட்டுப்பாட்டில் தென்மாவட்ட திமுக?

தென்மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் தென்மாவட்டங்கள் மெல்ல மெல்ல கனிமொழி கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன என்பதை இது காட்டுவதாகவே தெரிகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, மு.க. அழகிரி தனிக் கட்சி தொடங்கும் நிலையை தவிர்க்க திமுக தலைமை தீவிரமாக முயன்றது.

இப்போது மு.க. அழகிரி மவுனம் காத்து வருகிறார். இந்த மவுனம் தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கிறது கட்சி தலைமை. மு.க. அழகிரிக்கும் திமுக தலைமைக்குமான சமரசம் என்பது கருணாநிதி குடும்பத்துக்குள்ளான ஒரு நிகழ்வு. அதேநேரத்தில் கனிமொழிக்கான அடுத்தடுத்த முக்கியத்துவம் கிடைத்து வருவதையும் இது வெளிப்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட என்கின்றனர்.

மு.க. அழகிரி இடத்தில் கனிமொழி?

மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்தான் தென் மாவட்ட திமுக இருந்தது. திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக அழகிரி பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு இந்த பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அவர் திமுக துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டார். தற்போது கனிமொழிக்கு தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர் பதவி என்பது அழகிரி வகித்த இடத்தை நோக்கிய நகர்வுதான் என்பதாவே பார்க்கிறோம் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்