"இது"தான் சசிகலா திட்டமாம்... ஒர்க் அவுட் ஆகுமா?
"இது"தான் சசிகலா திட்டமாம்... ஒர்க் அவுட் ஆகுமா?


காலையில் இருந்து பரபரப்பு எகிறி கொண்டு வரும் இந்த சூழலில், சசிகலா அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற தகவலும் கசிந்து வருகிறது..!

காரில் கொடி, கழுத்தில் துண்டு என ஒருமுடிவோடு வந்துள்ளார் சசிகலா.. இந்த ஒரு சிக்னலே அதிமுகவுக்கு போதுமானதாக இருந்து வருகிறது. இதன் மூலம் அதிமுக தலைமைக்கு நேரடியாகவே சவால் விடுத்துள்ளார் சசிகலா... இனி அடுத்து அவர் செய்யப் போகும் வேலையையும் சிக்னலிட்டு காட்டி விட்டார்.. 

இனி தினமும் தி நகர் வீட்டில் நிர்வாகிகளை சந்திக்க போகிறார்.. அநேகமாக அதிமுகவின் பெருந்தலைகளை உள்ளே இழுக்கும் வேலையை சசிகலா அதிரடியாகவே ஆரம்பிக்கலாம். "ஆபரேஷன் சசி".. இதுதான் என் டார்கெட்... கிளியர் சிக்னல் தந்து.. திணற விடும் அமமுக! மீடியா ஆனாலும், அதன்பிறகு என்ன செய்வார்? ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.. 

இன்று முதல்நாள் என்பதால், மூத்த தலைகள், நெருக்கமான ஆதரவாளர்கள் வெளிப்படையாக சசிகலாவை வரவேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.. மொத்த மீடியாவும் சசிகலாவின் வருகையை ஃபோகஸ் செய்து வருவதால், சிறிய அளவிலான ஆதாரவாளர்கள், மற்றும் தொண்டர்களின் வரவேற்பை மட்டுமே சசிகலா பெற்று கொள்வார் என்று கூறப்படுகிறது. 

 இதற்கு நடுவில், சட்டரீதியாகவும் அவர் சில நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சசிகலா செல்லக்கூடும் என்கிறார்கள்.. அப்படியே சசிகலா சென்றாலும், அதில் எந்த சட்டப்படி தவறும் இல்லை என்கிறார்கள்.. அதேபோல எம்ஜிஆர் சமாதிக்கும் செல்லலாம்.. எம்ஜிஆர் சமாதியில் யாரையும் தடுத்து நிறுத்த முடியாது.. 

ஒருவேளை கும்பலாக சென்றால் வேண்டுமானால் கட்டுப்பாடுகள் போடப்படலாம், அதுவே சசிகலா, தனியாக எம்ஜிஆர் சமாதிக்கு சென்றாலோ, அதற்கு பின்னால் உள்ள ஜெயலலிதா சமாதியின் வாயிலில் நின்றாலோ, யார் என்ன கேட்க முடியும்? என்ற கேள்வியும் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவை அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது.. இது சம்பந்தமாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி வருகிறது.. வரும் 14ந் தேதி சென்னைக்கு பிரதமர் வர போகிறார்... 

இதை தவிர பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வரப்போகிறது. இந்த 24-ம்தேதி வரைதான் சசிகலா கெடு வைத்திருக்கிறாராம். அதிரடி 24-ம் தேதிக்குள் எல்லாம் தானாகவே சுமூகமாகிவிட்டால், ஒரு பிரச்சனையும் இல்லை, ஒருவேளை இப்போதுள்ளது போலவே எதிர்ப்புகள் தொடர்ந்தால், அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் தான் என்று பறைசாற்றியபடி, அதிமுகவை மீட்டெடுக்க தயாராக போகிறாராம்.. 

அதன்படி, அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செல்லவும் ரெடியாகி வருகிறாராம். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. 24-ம் தேதி காரணம், அமமுகவில் சசிகலா உறுப்பினரே இல்லை.. அதனால்தான் அதிமுக கொடியுடன் வருகிறார்.. அதிமுகவை மீட்டெடுக்க அமமுகவை பயன்படுத்துவது ஒர்க் அவுட் ஆகுமா? அல்லது அமமுகவில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுகவுடன் பலவருட காலம் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தவர்கள் என்பதால், இது சக்ஸஸ் ஆகுமா என்று தெரியவில்லை.. 

 அதேசமயம் எல்லாவித, அதிரடிகளையும் இன்று ஒரேநாளில் எடுத்துவிடாமல், ஜெ.பிறந்த நாள் வரை காத்திருப்பார், அவசரப்பட்டு எதையும், செய்ய மாட்டார் , இன்னும் ஓபனாக சொல்லபோனால், பிரதமர் வந்து சென்ற உடனேயே பலவித மாறுதல்கள் தானாகவே ஏற்படும் என்றும் அரசியல் கணித்து சொல்கிறார்கள்.. எப்படியோ, ஒரு முடிவோடுதான் சசிகலா இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகி கொண்டிருக்கிறது.