பா.ஜ.கா.வில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள்...?

BJ P வில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் இணைகின்றனர் என்று சாமிநாதன்எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர்சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்நமச்சிவாயம் ஆகியோர் இன்றுநிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி புதுவைக்குவருகிறார். அன்றைய தினம் அரசுவிழாவிலும், பொதுக்கூட்டத்திலும்பங்கேற்கிறார்.
காலை 11 மணிக்கு ரோடியர் மில் திடலில்பொதுக்கூட்டம் நடக்கிறது.பொதுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றிபுதுவையை சேர்ந்த அனைத்து தரப்புமக்களும் பங்கேற்க வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமைஉண்டு என சுப்ரீம் கோர்ட்டுஅறிவித்துள்ளது. வழக்கமாக கட்சிதொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்,கட்சித்தலைமை என அனைவரையும்நாராயணசாமி ஏமாற்றியே பழக்கப்பட்டவர்.
சமீபத்தில்கூட கட்சித் தலைவர்வந்திருந்தபோது, மக்கள்முன்னிலையிலேயே ஏமாற்றினார்.இப்படிப்பட்டவர் நியமன எம்.எல்.ஏ.க்களுக்குவாக்களிக்க தகுதி இல்லை என்கிறார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி சுப்ரீம்கோர்ட்டுக்கு எதிராக பேசுகிறாரா?சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்கிறாரா? எனதெளிவாக கூற வேண்டும். 15 நாட்களுக்குமுன்பு வந்த இந்திய தலைமை தேர்தல்ஆணையர்கூட, நியமன எம்.எல்.ஏ.க்களுக்குவாக்களிக்கும் உரிமை உண்டு எனதெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் அரசியல்கட்சிதலைவர்களையும், மக்களையும்முட்டாளாக்க நினைக்கிறார். சட்டமன்றத்தில்நியமன எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக,நிச்சயமாக வாக்களிப்பார்கள்.
ஓரிருநாளில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள்பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.யாரையும் கட்டாயப் படுத்தியோ, மிரட்டியோசேர்க்க வில்லை. காங்கிரசுக்கு எதிர்காலம்இல்லை என்பதால் அந்த கட்சியை விட்டுவிலகி வருகின்றனர். யாரையாவது மிரட்டி,கட்டாயப்படுத்தியிருந்தால் புகார் தரலாம்.நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க எனகுறிப்பிட்டது தவறு என காங்கிரசார் கூறிவருகின்றனர்.
கடந்த 50 ஆண்டாக புதுவை சட்டசபையில்நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்தது யார்?நாஜிம், கேசவன், அண்ணாமலை ரெட்டியார்,நாரா கலைநாதன், பாத்திமாபீவி என பலரும்அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்தான்எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். அவர்கள்அரசியல் கட்சியிலும் செயல்பட்டனர்.சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்கள்பா.ஜனதாவினர் என்றுதான்குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதாகநாராயணசாமி குற்றம் சாட்டுகிறார்.பா.ஜனதா எந்த ஆட்சியையும் கவிழ்த்துஇல்லை. நாடு முழுவதும் 356-வதுசட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநிலஆட்சிகளை காங்கிரஸ்தான் கவிழ்த்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டுவெளியே வருவதால்தான் ஆட்சிகவிழ்கிறது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களைதக்க வைக்க முடியாத முதல்- அமைச்சர்மற்றவர் மீது குற்றம்சாட்டி வருகிறார்.நாராயணசாமியை பொறுத்தவரைமற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதையேவாடிக்கையாக கொண்டவர் என்றுசொன்னார்.