வெறும் 25 தான்.. மொத்த சமுதாய வாக்குகளை தட்டி தூக்கும் எடப்பாடியார்
செம ஸ்கெட்ச் ஒன்றினை அதிமுக மேலிடம் போட்டு வருகிறதாம்.. விரைவில் பாமகவுடன் கூட்டணி முடிவாகும் என்று தெரிகிறது.. அதேசமயம், மக்களின் அதிருப்தி ஓட்டுக்களில் இருந்து தப்பிக்கவும் பலே ஐடியா போட்டு வருகிறதாம்.
தேர்தல் என்றாலே, முதல் கட்சியாக பாமகவை இழுத்து உள்ளே போட்டு கொள்ளும் வேலையை வழக்கமாக அதிமுக, திமுக செய்துவிடும்.. ஆனால், இந்த முறை 2 கட்சிகளுமே பாமகவுடன் கூட்டணிக்கு தயங்கியது. இதற்கு ஒரே காரணம் இடஒதுக்கீடு விஷயத்தை டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்து வருவதுதான்.. இந்த அளவுக்கு உறுதியாக டாக்டர் ஐயா இதற்கு முன்பு வேறு எந்த விஷயத்திலும் இருந்ததில்லை
இதனாலேயே கூட்டணியை உறுதி செய்ய வந்த அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தது.. ஒருகட்டத்தில் முதல்வரை சந்தித்து ராமதாஸ் பேச போகிறார் என்ற தகவலும் வெளியானது.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இட ஒதுக்கீடு இந்நிலையில் ஒரு தகவல் வெளியானது.. அதன்படி, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது.. அதாவது, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் இருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளனராம்..
2012-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக சந்தானம் குழு கொடுத்த அறிக்கையின்படி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்றும் செய்திகள் 2 நாளைக்கு முன்புகூட வெளியானது.
இதற்கு காரணம் பாமகவின் தயவு ஓரளவு அதிமுகவுக்கு தேவை என்பதால்தான்.. அதுமட்டுமல்ல, வேண்டி விரும்பி கேட்டு கொண்டிருந்த பிரேமலதாவின் கோரிக்கையையும் நிராகரித்தது பாமகவை திருப்திப்படுத்தவே என்கிறார்கள்.. ஆனால், பாமகவின் கோரிக்கைக்கு அதிமுக தரப்பு ஒப்புதல் தந்தால், ராமதாஸின் போராட்டம் வெற்றி பெறும்.. அத்துடன், பாமக - அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம், மற்ற சமூகத்தினரும் இதுபோலவே கிளம்ப ஆரம்பித்துவிட்டால் என்னாகும்? தேர்தலில் பிற சமுதாயத்தினரின் எதிர்ப்பு ஓட்டுக்களையும் அதிமுக அறுவடை செய்ய நேரிடுமா? ஏற்கனவே கருணாஸ் கோரிக்கை விட ஆரம்பித்துவிட்டாரே? என்பன போன்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. ஆனால், இந்த இடத்தில்தான் அதிமுக தரப்பு ஒரு சூப்பர் ஐடியாவை வைத்துள்ளதாம்.
ஆரம்பத்தில் 40-க்கு குறையாமல் சீட் கேட்டது பாமக.. பிறகு 32 சீட்களில் உறுதியாக இருந்தது.. கடைசியாக 27-க்கு ஓகே சொல்லி உள்ளதாம்.. ஆனால், அதிமுகவோ 25தான் என்று நிர்ணயித்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, வின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று, அதை அறிவித்தும்விட்டு, அதற்கு பிறகு யார் மூலமாவது கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கும் ஐடியாவில் உள்ளதாம்.. இப்படி ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கசிந்து வரும் நிலையில், பாமக அதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது மிகபெரிய சவால்தான்..!